நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு

பற்களின் சிறையில்
பக்குவமாய் சுழல்கிறது நாக்கு.

சொற்களின் கோர்வையில்
சந்தம் சொந்தம் கொண்டாடுகிறது.

"செந்தமிழும் நாப்பழக்கம்"
எனக்கும் நாப்பழக்கம் உண்டு...?
நான் கவிஞன் என்று
சொல்லி உலா வந்தேன் .

தலையில் சற்று
பாரம் ஏறியிருந்தது.

கனவில் அன்றே
கலைக்கடவுள் தோன்றினள்.

"மூடனே !..செந்தமிழும் சிந்தைப்பழக்கம்....
சென்று பயிலடா "
என்றனள்.

திடுக்கென எழுந்தேன்
கனவினை நினைந்தேன்
பாரம் இறங்கியிருந்தது.
தெளிவு தலையில் இருந்தது.

இப்போதெல்லாம்
என் கைகளிலோ .
புத்தக மூட்டைகள்..

எழுதியவர் : Minkavi (6-Jan-13, 7:06 pm)
பார்வை : 545

மேலே