வேசரவணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேசரவணன்
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  11-Aug-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2010
பார்த்தவர்கள்:  476
புள்ளி:  56

என்னைப் பற்றி...

Lecturer Department of Bio Medical Engineering Higher College of Technology Oman , Muscat .

என் படைப்புகள்
வேசரவணன் செய்திகள்
வேசரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2019 11:42 am

நிழலாக இருந்ததெல்லாம்
நிஜமாக மாறயிலே ..
நிஜமெல்லாம் நிழலாகி
போவதென்ன ..
சுட்டெரிக்கும் சூரியன்
சட்டென சிரிக்கையிலே...
வெள்ளி நிலா
பட்டென்று மறைவது
போல ..
காலை கதிரவன்
கண்ணொளியில்,,
பனித்துளிகள் மாயமாய்
தொலைவது போல..
துன்பம் என்பதும்
நிரந்தரம் இல்லையடா ...
மலை போல தேங்கி நிற்கும்
துன்பம் கூட..
சிறு இன்பம் நம் மனதில்
காணும்போது,,
சில்லு சில்லாய்
சிதறி கரைந்து போகும்..
துன்பம் ஒன்று உன்னை
தீண்டும் வேளையிலே..
சிறு இன்பம் தேடி
உன் முயற்சி இருக்கட்டுமே..
இயற்கையின் இல்வாழ்வில்
எந்த துன்பமும்
நிரந்தரமில்லை..
துன்பம் துயில்வதும்
இன்பம் துடிப்பதும்
நம் மனதின் கையிலடா..
துன்பம் தூர தள்ளி
இன்பம்

மேலும்

வேசரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2018 11:06 am

என்ன
உன் கண்ணுக்குள்ள
வெச்சுக்கோ...
இல்ல காணாமல்
போயிடுவேன்...
நெஞ்சுக்குள்ள பூட்டிக்கோ..
இல்ல
காத்தோட கலந்துடுவேன்...
உன் கனவோடு சேர்த்துக்கோ...
கரைஞ்சுடாம
பார்த்துக்கோ...
உன் நெனப்புல
இந்த உசுரு உடாம
துடிக்குதுடி...
உட்டுப்புட்டு போ னு
சொன்ன..
திக்கும் இல்ல ..
திசையும் இல்ல...
உன் நெனப்பு இல்லையினா..
இங்க உசுருக்கே
வழியுமில்ல...
காத்தோடு கலந்து
வரும்..
மூங்கிலின் நாதம் போல...
என்னோட உன்
நெனப்பு ஒன்றாகி
கிடக்குதடி...

மேலும்

வேசரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2018 7:20 pm

உயிர் கருவாகுவது போலத்தான்
எண்ணங்கள் எழுத்தாகுவதும்..
எழுத்தால்..
நிழல்கள் நிஜமாகிறது...
ஆசைகள் கவிதையாகிறது..
உள்ளம் இலகுவாகிறது...
வாழ்க்கை அர்த்தமாகிறது...
இன்று ஏனோ
மனம் மகிழ்கிறது ...
எழுத்தாளனாய் என்னை
நானும் உணர்கிறேன்...
பாராட்டுக்கள் என்னை
பரவசமாக்குகிறது...
நட்பின் வாழ்த்துக்கள்
என்னை
மீண்டும் எழுத்தாளனாய்
இந்த உலகத்திற்கு...
நன்றி நட்பே
என்னை எனக்கு
உணர்த்தியதற்கு...
என் நெடுநாள்
கவிதை பயணத்தின்
புது பயணியாக நீ...
உன் வருகைக்கு நன்றி..
வாழ்த்திற்கு நன்றி...

மேலும்

வேசரவணன் - வேசரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2017 1:17 am

அதுதான் முதல் நாள்...
என் பிறவி முழுமையான
நாளும் கூட....

உன் முதல் ஸ்பரிசம்...
உன் மேலான என்
பார்வை....
என்னை பெண்ணாக
உணர வைத்த அந்த
கணம்...
என் வாழ்வில்
அர்த்தமுள்ள மகிழ்ச்சி..

உன் மீதான என்
ஈர்ப்பு...
உன்னைப் பற்றிய
என் தேடல்..
நான் அறிந்தும் அறியாமலும் ஆரம்பமான அந்த நிமிடம்...
என் வாழ்வின் அர்த்தம் !

உன் பெயரறிய என்
முதல் தேடல்...
முகநூலால் நம் நட்பு...
நினைத்தாலே இனிக்கிறது இன்றும்...

முதல் புன்னகை..
முதல் அறிமுகம் என தொடங்கினோம்...
நட்பென்று நினைத்து..

முதன் முறை உன்
கை கோர்த்து சென்ற
நம் பயணமே...
என் உள்ளுணர்வை
உணரவைத்தது...

நீ வாங்கி தந்த
இன

மேலும்

சூப்பர் சரவணன் 29-Apr-2018 4:39 pm
வேசரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2017 2:21 pm

என்ன வாழ்க்கை ...

சில நேரங்களில்
பல பேர் மனதில்...

வாழ்ந்தது வாழ்க்கையா...
வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்க்கையா ...
வாழப்போவது வாழ்க்கையா..

ஏதோ எண்ணங்களின்
சலனம் இன்று ...

குழந்தையாய் குதூகலமாய் ....
அன்னை மடியில் ஆனந்தமாய் ..
அப்பா தோளில் தோரணமாய் ..
அண்ணன் அக்கா தங்கை என்று
அட்டகாசமாய் அற்புதமாய் இருந்தேனே
அதுதான் வாழ்க்கையோ...

பள்ளி சென்றேன் பாடம் படித்தேன்
ஆட்டம் பட்டம் தோழர் தோழி
என்று துக்கமும் இல்லாமல்
தூக்கமும் இல்லாமல் விளையாட்டாய்
வாழ்ந்தேனே அதுதான் வாழ்க்கையோ ...

கல்லூரி... கனவுகள் ...
நண்பன் ... சந்தோசம்...
காதல்... சோகம் என்று
கலவையாய் வாழ்ந்த

மேலும்

வேசரவணன் - வேசரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2015 11:07 am

இந்த வருடத்தோடு படிப்பை முடித்து , கனவுகளோடு களித்திருந்த கல்லூரி வாழ்க்கையின் கதவுகளை மூடி , நிஜ வாழ்க்கையின் கதவுகளை திறந்து , கண்ட கனவுகளை நிஜமாக்க , கண்களை திறந்து கனவுகள் களைந்து , காலடி வைக்க போகும் எனது குழந்தைகளே....

நண்பர்களை பிரிய போகும் இந்த நேரம் சிறிது கடினமானதுதான்,,,,
ஆடி பாடி திரிந்து சென்ற கல்லூரி வாசலை இனி ஆசையாய் மட்டுமே மிதிக்க முடியும்,,
ஆசிரியர் பாடம் நடத்தும் போதும் வரும் தூக்கத்தை கண்ணை திறந்து கொண்டே தூங்கிய இடங்களை இனி வெளியில் நின்றுதான் பார்க்க முடியும்...
output வரவில்லை என்றாலும் கோட் போடாமல் ஷூ போடாமல் போய் நின்று வாங்கிய திட்டுகளையும் எழுதிய அப்பாலஜி க

மேலும்

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி தோழமையே..... 13-Apr-2015 11:18 am
கவலை இல்லாமல் கழித்த காலங்களை நினைத்து கவலைபடவேண்டாம் என்று அழகாக சொல்கிறது படைப்பு ..சிறப்பு தோழரே.. 13-Apr-2015 11:04 am
வேசரவணன் - வேசரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2014 4:46 pm

நெற்றிப் பரப்பில்
உன் ஒற்றை முத்தம்...
இதய துடிப்பில்
உன் ஒற்றை நாடி....
கண்களின் ஒளியில்
உன் ஒற்றைப் பார்வை...
உயிர் வரை உள்ளிருக்கும்
உன் ஒற்றை நினைவு...
உணருகிறேன்....
இன்று வரை...
நான் மட்டும் ஒற்றையாய்!

மேலும்

நன்றி நண்பரே... 06-Apr-2015 10:51 am
நல்லாருக்கு தோழரே... 16-Dec-2014 3:21 am
வேசரவணன் - வேசரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2014 1:55 pm

வாழ்க்கை கடலில்
மூழ்கி கிடந்தது...
மூச்சு முட்டும் போது...
சற்றே தலை தூக்கி
பார்த்தேன்....
சந்தோசம் எங்கே என்று...

கண் முன்னே ஏதும் இல்லை...
நினைவுகள் மட்டும் பின்னோக்கி...

நுழைவு வாயில் தவிர்த்து ...
சுற்று சுவர் தாண்டி கல்லூரி
சென்ற சுகமான அந்த காலங்கள்....

விடிந்தும் தூங்கி...
தாமதமாய் வகுப்பு சென்று...
பேராசிரியர்களின் பெரும் வசைவை
சிரிப்போடு புறம் தள்ளி...
சீக்கிரமாய் விடுதி திரும்பிய
அந்த சந்தோசமான தினங்கள்...

நண்பனின் காதலுக்கு...
துறை தாண்டி தூது சென்று...
கை கட்டி நின்ற அந்த
தைரியமான நாட்கள்...

தேர்வென்றால் தெரிந்த நண்பனிடம்
கதை கேட்டு...
தெரியாத கேள்

மேலும்

தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி நட்பே 30-Nov-2014 8:14 am
வாழ்கையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்.... உங்களின் சந்தோசத்தை தேடும் போது.... கனவாய்.... கற்பனையாய்.... கவிதையாய்... கண்ணீராய்... வந்து போகும் உங்களின் ! கல்லூரி காலங்கள்.... உண்மை அருமை அற்புதமான படைப்பு நட்பே....! ஒவ்வொரு வரிகளிலும் நினைவலைகள்........ 29-Nov-2014 2:56 pm
வேசரவணன் - வேசரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 1:55 pm

வாழ்க்கை கடலில்
மூழ்கி கிடந்தது...
மூச்சு முட்டும் போது...
சற்றே தலை தூக்கி
பார்த்தேன்....
சந்தோசம் எங்கே என்று...

கண் முன்னே ஏதும் இல்லை...
நினைவுகள் மட்டும் பின்னோக்கி...

நுழைவு வாயில் தவிர்த்து ...
சுற்று சுவர் தாண்டி கல்லூரி
சென்ற சுகமான அந்த காலங்கள்....

விடிந்தும் தூங்கி...
தாமதமாய் வகுப்பு சென்று...
பேராசிரியர்களின் பெரும் வசைவை
சிரிப்போடு புறம் தள்ளி...
சீக்கிரமாய் விடுதி திரும்பிய
அந்த சந்தோசமான தினங்கள்...

நண்பனின் காதலுக்கு...
துறை தாண்டி தூது சென்று...
கை கட்டி நின்ற அந்த
தைரியமான நாட்கள்...

தேர்வென்றால் தெரிந்த நண்பனிடம்
கதை கேட்டு...
தெரியாத கேள்

மேலும்

தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி நட்பே 30-Nov-2014 8:14 am
வாழ்கையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்.... உங்களின் சந்தோசத்தை தேடும் போது.... கனவாய்.... கற்பனையாய்.... கவிதையாய்... கண்ணீராய்... வந்து போகும் உங்களின் ! கல்லூரி காலங்கள்.... உண்மை அருமை அற்புதமான படைப்பு நட்பே....! ஒவ்வொரு வரிகளிலும் நினைவலைகள்........ 29-Nov-2014 2:56 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே