உன் பார்வையில் என் காதல்

அதுதான் முதல் நாள்...
என் பிறவி முழுமையான
நாளும் கூட....
உன் முதல் ஸ்பரிசம்...
உன் மேலான என்
பார்வை....
என்னை பெண்ணாக
உணர வைத்த அந்த
கணம்...
என் வாழ்வில்
அர்த்தமுள்ள மகிழ்ச்சி..
உன் மீதான என்
ஈர்ப்பு...
உன்னைப் பற்றிய
என் தேடல்..
நான் அறிந்தும் அறியாமலும் ஆரம்பமான அந்த நிமிடம்...
என் வாழ்வின் அர்த்தம் !
உன் பெயரறிய என்
முதல் தேடல்...
முகநூலால் நம் நட்பு...
நினைத்தாலே இனிக்கிறது இன்றும்...
முதல் புன்னகை..
முதல் அறிமுகம் என தொடங்கினோம்...
நட்பென்று நினைத்து..
முதன் முறை உன்
கை கோர்த்து சென்ற
நம் பயணமே...
என் உள்ளுணர்வை
உணரவைத்தது...
நீ வாங்கி தந்த
இனிப்பை விட சுவையானது
உன்னுடன் நான்
இருந்த தருணங்கள்...
நீ தாயாகவும் நான் சேயாகவும் ...
உனக்குள்ளே தொலைந்தேன் நான்...
உனக்குள்ளும் நான்
என்று உணர்ந்த நொடி...
கோடி மத்தாப்புகள்
என்னுள்ளே....
காதலை காதலோடு
சொன்ன போதே....
கவலைகளோடு
பிரிவோமா?
காலத்தின் கோலம்...
தாய் தந்தைக்காக நீ என்னை விட்டு விலகி...
உனக்காக நான்
என்னை விட்டு விலகி..
இன்றும் கூட
பேசுகிறோம்...
காதலும் இல்லாமல்!
தோழமையும் இல்லாமல்...
காதலின் ஆழம் பிரிவில் என்று கேட்டறிந்த நான்...
உணர்கிறேன் இன்று...
உன்னோடான ஒவ்வொரு
நினைவுகளும் தான்...
என்னோடான நினைவுகளே....
வாழ்க்கைத் துணையாகவும் இல்லை...
வழித்துணையாகவும் இல்லை இன்று....
காலம் பதில்
சொல்லும் என்
நினைவுகளுக்கு....
உன் வரும் காலம்
வசந்தமாக...
வாழ்த்துக்கள் ..
உன் நீங்கா நினைவுகளுடன்
.........நான்.....