Vasu Srinivasan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Vasu Srinivasan |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Mar-1954 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 21 |
அரை வயிறேனும் உண்டி அடைக்க
கரையும் காகம் கவண் இலக்காக்கி
இரையாய் கொள்ளும் இழிதல் ஒழிந்து
நிறைவாய் உண்ணும் நிகழ்வும் என்றோ?
பந்தமெனப் பசியும் பிணியும் பற்றிட
சொந்தமெனச் சொல்ல சோகமே உண்டு
வந்திடுமோ இவர்கள் வாழ்வில் வசந்தம்
வெந்த மனதில் வீசிடும் தென்றலாய்
கழுத்தில் கட்டிட வாங்கிய கயிறை
இழுத்து கையில் இறுக்கிக் கட்டியே
அழித்தாய் அவன் அனுதினக் கனவை
பழியும் கொண்டாய் பகடம் பேணி
கண்ணா எனும் கனிமொழி களைந்து
அண்ணா என்றே அழைத்து அழித்தாய்
மண்ணாய் போனது மனதில் கோட்டை
பெண்மனம் கல்லென பெயரும் பெற்று
நீலவானில் நீந்தும் நிலவை விலக்க
உலவிடும் மேகமும் மூடியே உண்ண
மலர்ந்த மதலையும் நீங்கும் நிலவால்
அலங்கியே அன்னம் தவிர்த்து
நீலவானில் நீந்தும் நிலவை விலக்க
உலவிடும் மேகமும் மூடியே உண்ண
மலர்ந்த மதலையும் நீங்கும் நிலவால்
அலங்கியே அன்னம் தவிர்த்து
பழவினை நீக்கும் பசும்பொன் நிறத்தாள்
தழல்பொன் இரசதம், தந்திடும் ஆரமுடை
வெண்மதி யொத்த விசதத் திருமகளை
தண்தீயின் மூத்தவா தா
பொன்னும், பரியும், பசுவுடன் கூடிய
என்சுற்றம் யாங்கள் எவர்கால் பெறுவமோ
அத்திரு யெம்மை அகலாமல் எம்முள்ளே
வைப்பாய் மறையின் முதல்
முதன்வரு குந்தம் வழிவரும் தேருடன்
மாதங்கப் பேர்பிளிறு மாட்சியின் கட்டியமாய்
வந்த திருவை விளித்தேன்- உறைக
பரிவுடன் உள்ளில் நிறைந்து
முறுவலும் காட்டி மிளிரும் குணத்தாள்
கருணை ஒளிர்ந்து களிப்பும் அளிக்கும்
முளரி நிறத்தாள், மலரமர்ச் செல்வி
அகத்துள் புகுவாய் அலர்ந்து
ஒளிநிறை திங்களை ஒத்துச் சுடர
வண்ண வண்ண வெந்த காய்களுடனே
வெண்சோறும் நெய்யில் வறுத்துப் புரட்டி
உடன் வரும் உற்ற தோழனாய்
கட்டித் தயிர் கூடிய வெங்காயமும்
எந்தையும் தாயும் அன்றளித்த அமுதாய்
வெந்தயம் மிளகுடன் மணக்கும் குழம்பும்
உரை மிளகாய் உப்புடனே அரிதாரமிட்ட
உருளை எண்ணையில் ஊற வதக்கி
மகிழ்வுடன் எமக்களித்த மென் கரங்களில்
பொன் காப்பிட பணமில்லை- மனமுண்டு
வாழ்த்த வந்தன வார்த்தைகள் .
தூய தமிழறியா தமிழன் யான்
ஆயகலை கவியறிய ஆசை வந்து
பாயும் வார்த்தைப் பாவென தொடுத்து
தூயதுணை திருத்தத் தந்தேன்