கௌசல்யா சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கௌசல்யா சேகர்
இடம்:  ஜெயங்கொண்டம்
பிறந்த தேதி :  27-Jul-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2022
பார்த்தவர்கள்:  629
புள்ளி:  41

என்னைப் பற்றி...

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்

என் படைப்புகள்
கௌசல்யா சேகர் செய்திகள்
கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2025 8:00 pm

கயிறு அறுந்த காத்தாடியாகவே இருந்தாலும், மரத்தின் கிளைகளில் சிக்குண்டு பறக்கவே விதியாகிறது.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2025 7:51 pm

கயிறு அறுந்த காத்தாடியாகவே இருந்தாலும், மரத்தின் கிளைகளில் சிக்குண்டு பறக்கவே விதியாகிறது.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2024 10:22 pm

ஒரு காட்டுல கொடூர ஜந்து யாருன்னு கேள்வி எழுப்புனாங்களாம் அப்போ,

மான் : இந்த புலிதான் எங்க இனத்தையே வேட்டையாடி கொல்லுது , எனவே புலி தான் கொடூர ஜந்து.

புல் : இந்த மானுங்க,நாங்க வளர்வதற்கு முன்பே எங்கள மேய்ந்து தின்னுடுது, எனவே மான்தான் கொடூர ஜந்து .

Me: இப்டி ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தவங்க மேல குற்றம் வச்சுதுங்களாம் . எனவே ஒருத்தவங்க perspective வச்சு, இவங்க நல்லவங்க, இவங்க கெட்டவங்கன்னு பொதுவா சொல்ல முடியாது, இங்க எல்லாருமே எவரோ ஒருத்தவங்க லைஃப் ல கெட்டவங்கதான். மத்தவங்களுக்கு கெட்டவங்களா தெரியுறவங்க, நமக்கும் கெட்டவங்களா இருக்கனும்னு அவசியம் இல்ல.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2024 10:02 pm

மான் : இந்த புலிதான் எங்க இனத்தையே வேட்டையாடி கொல்லுது , எனவே புலி தான் கொடூர ஜந்து.

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2023 4:01 am

ஆல்கஹால் இல்லாமல் ஆட்டிபடைக்கிறாய்!!
ஒவ்வொரு நொடி இடைவெளியும்
தெளிவுபெற முடியாமல் மூழ்கி மீள்கிறேன்!!
ஆல்கஹாலை தாண்டிய போதை காதலுக்கு உண்டு என உன்னிடம் பேசிய பின் ஒப்புக்கொள்கிறேன்! சற்று ஞானமும் கொள்கிறேன் போதையின் தவிப்பில்....

- கௌசல்யா சேகர்

மேலும்

கண்டிப்பாக ... மேலும் நன்றிகள் அது வெறும் வரிகளே போதையில் ஏற்கனவே சிக்கி மிண்டவள் எனவே கவனமாகதான் இருப்பேன்.. 18-May-2023 2:03 am
வணக்கம் கௌசல்யா சேகர் அவர்களே தங்களின் கவி வரிகள் முற்றிலும் உண்மையே. காதலையும்... அன்பையும் யாராலும் அளவிட இயலாது. ஆனால் அதே சமயம் போதையை எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 09-May-2023 6:42 am
கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:28 pm

என் இனிய தனிமையே ❤️

விடுதி அறையில்
 விடியலை தேடுகிறேன்
பசியோடு தொடரும் இரவுகளில்
 எத்தனை எத்தனை நினைவுகள்
சூரியன் உதிக்கும் வரை 
  திக்கற்ற சிந்தனைகளில் மனம்
உறக்கம் இல்லா இரவுகளில் 
  உறவுகளை நினைத்து பார்க்கிறேன்
தனிமையாய் உணரும் தருவாயில்
 ஆறுதல் சொல்ல ஏதுவாய் 
பேப்பரும் பேனாவும்....
 தொடர்கிறது நாள் தோறும் வலிகள்
நீளுகிறது என் ஏக்கங்களின் வரிகள்
 சம மரியாதை உண்டு என நினைத்து 
சினிமாவின் மீது காதல் 
  வார்த்தைகளால் சொல்லமுடியாது
வரிகளால் எழுத முடியாது 
  உணர்ந்தால் மட்டுமே வலிகள் புரியும் 
உதவி இயக்குனர்கள் என்றாலே 
  பெரும் திண்டாட்டங்கள்தான்.....
அதுவும் பெண் என்றால் ...? 
  கேள்விக்குறிகள் நிறைந்த பயணம்
உறக்கத்தை மறந்து நீளுகிறது இரவு
 எத்தனை கேளிக்கைகள்
அத்தனைக்கும் நடுவில் 
  விருந்தாக்க நினைக்கும் மிருகங்கள்
உதவி எனக்கேட்டால்
 உடம்பை நோக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவில் என் போராட்டம்
 மனதில் ஆயிரம் வலிகள்
சிரிக்கிறேன் போலி புன்னகையால்
 செல்லும் பாதையோ கரடு முரடு
அதனை தாண்டுவதே என் இலக்கு
 திண்டாட்டத்துடன் முயற்சிக்கிறேன்
நாளை கொண்டாடுவதற்காக...

 - கௌசல்யா சேகர் -

மேலும்

முயற்சி நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான் 07-Dec-2023 4:25 am
கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2022 12:27 am

உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!! 
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:10 pm

எனது இரவுகள்

கரையை சேர பல குழப்பங்களுக்கு நடுவே அலைமோதும் நிமிடமாகவே செல்கிறது !!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
இ க ஜெயபாலன்

இ க ஜெயபாலன்

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
karthikboomi

karthikboomi

Ramanathapuram
நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே