சித்ரா விஜயகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சித்ரா விஜயகுமார் |
இடம் | : பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 11-May-1969 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 5 |
நடக்கின்ற பாதை முடிந்து போகும்
முடிவே இல்லாத கடலும் ஓரிடத்தில் முடிவு காணும்
பகலை படைக்கும் கதிரவனும் மறைந்து போவான்
இரவை ஒளிர வைக்கும் சந்திரனும் கரைந்து போவான்
காலங்கள் ஓடி போகும்
காலதேவன் விரைந்து போவான்
கண்ணிலிருந்து வழிகின்ற நீரும் நின்று போகும்
உடலில் இருந்து உதிரும் உதிரமும் உறைந்து போகும்
மனித மனமும் மாறிப்போகும்
மாற்றம் என்னும் மோகத்தை தேடிப்போகும்
மண்ணை விட பெரிய விண்ணிற்கும் எல்லையுண்டு
மனித அன்பிற்கே எல்லை இல்லை .
வான்வெளியில் ஒட்டவைத்த
வட்ட வடிவ தட்டு போல
வெள்ளை நிறப் பூபந்தாய்
மின்னலிடும் வெண்ணிலவே !!!
தன்னைத் தானேக் காத்துக் கொள்ளாதவன் உடல்
ஊனமில்லா விட்டாலும் ஊனமுள்ளவனே!
வீர்கொண்டு எழுவோம் நாமும்
ஏர்கொண்டு உழுவோம் நிலத்தை
நேர் வழிக்கண்டு உழைப்போம் என்றும்
பார் புகழ்க்கண்டு வாழ்வில் உயர்ந்தே
உயர்த்திடுவோம் நம் பாரதத்தை!
பாரதத்தைக் கூறுபோடும்
பாவிகளை மன்னித்து
பாராமுகமாய் நின்று
பார்த்துக் கொண்டிருப்பாள்
எங்கள் பாரதத் தாய்.
தப்பேதும் செய்திட்டாலும்
தன்மகனுக் கென்றென்றும்
தண்டனையே தரமாட்டாள் இத்
தரணியிலே பிறந்தத் தாய்.
கொம்பை வைத்து அடித்தாலும்
கொடிப் புல்லை போட்டாலும்
கொட்டியிலே போய் நின்று
கொடுத்திடுவாள் தம்பாலை பசுத் தாய்.
சட்டமது இருண்டாலும்
சங்கரனே சுட்டாலும்
சத்தியத்தை காத்திடவே
சத்தமின்றி நின்றிடுவாள் சத்தியத் தாய்.
பொட்டிழந்து நின்றாலும்
பொட்டல் வெளியில் படுத்தாலும்
பொறுப்புடனே தன்மகனை
பொறுமையுடன் காத்திடுவாள் விதவைத் தாய்.
மணாளனே பாக்கியமென்று
மன்னவனே சாத்
சுள்ளென்று உறைத்திடுவான்
தூக்கத்தை கலைத்திடுவான்
சோம்பேறியையும் சுறுசுறுப்பாக்கி
சொக்கட்டான் ஆடிடுவான் சூரியனே!
சுள்ளென்று உறைத்திடுவான்
தூக்கத்தை கலைத்திடுவான்
சோம்பேறியையும் சுறுசுறுப்பாக்கி
சொக்கட்டான் ஆடிடுவான் சூரியனே!
பாரதத்தைக் கூறுபோடும்
பாவிகளை மன்னித்து
பாராமுகமாய் நின்று
பார்த்துக் கொண்டிருப்பாள்
எங்கள் பாரதத் தாய்.
தப்பேதும் செய்திட்டாலும்
தன்மகனுக் கென்றென்றும்
தண்டனையே தரமாட்டாள் இத்
தரணியிலே பிறந்தத் தாய்.
கொம்பை வைத்து அடித்தாலும்
கொடிப் புல்லை போட்டாலும்
கொட்டியிலே போய் நின்று
கொடுத்திடுவாள் தம்பாலை பசுத் தாய்.
சட்டமது இருண்டாலும்
சங்கரனே சுட்டாலும்
சத்தியத்தை காத்திடவே
சத்தமின்றி நின்றிடுவாள் சத்தியத் தாய்.
பொட்டிழந்து நின்றாலும்
பொட்டல் வெளியில் படுத்தாலும்
பொறுப்புடனே தன்மகனை
பொறுமையுடன் காத்திடுவாள் விதவைத் தாய்.
மணாளனே பாக்கியமென்று
மன்னவனே சாத்
சுள்ளென்று உறைத்திடுவான்
தூக்கத்தை கலைத்திடுவான்
சோம்பேறியையும் சுறுசுறுப்பாக்கி
சொக்கட்டான் ஆடிடுவான் சூரியனே!