ஆரோன் கோபி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆரோன் கோபி |
இடம் | : பொன்னமராவதி |
பிறந்த தேதி | : 26-Sep-2004 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 346 |
புள்ளி | : 7 |
~ காதலி ~
கவிதை எனும் பேரரசி வரவுக்காக
கையில் கோல் பிடித்து
காத்திருந்த நேரமது !!!!!!
பேரரசி வரவின் போதுநான் சற்று
நித்திரை அடைந்து விட்டேன் !!!!!
அவளோ கோபமடைந்து என் நடு
நெற்றியில் ஒரு முத்திரை
பதித்து சென்றாள் !!!!!!
கண் விழித்த பிறகுதான் தெரிந்தது
வந்தது கவிப் பேரரசியல்ல
என் பேரரசி என்று !!!!!!!
ஆம் .
நித்திரையோ நித்தம் இல்லை !!!
ஆனால் ,
முத்திரையோ முத்தம் தான் !!!
பிறந்தாய் !
பிறர் சொல் கேட்டு வளர்ந்தாய் !
பிறர் சொல்லும்படி வாழந்தாய் !
ஏனோ யாரிடமும் சொல்லாமல்
சென்று விட்டாய் ??!!!!
நானோ என் காதல் அம்பினால் உன்
மார்பில் குத்தினேன் ;
நீயோ சற்று வித்தியாசமாக என்
முதுகில் குத்தினாய் ....
அடுத்த பிறவியில் மனிதனாக
ஆசைப்படுகிறாயா!!!!
நகைக்கு ஆசைப்படாதே
நகைக்க ஆசைப்படு !!!!!!
கண்ணுக்கு கருவிழியாய்
கடலுக்கு அலையாய்
வீட்டுக்கு வாசலாய்
விண்ணிற்கு நிலவாய்
கற்பகத்திற்கு ஒளியாய்
மானுக்கு கொம்பாய்
மயிலுக்கு தோகையாய்
என் வாழ்க்கைக்கு துணையாய் நீ !!!!
உன் இதயமாய் நான் !!!!!
தமிழ் என் மூச்சு