காதலி

~ காதலி ~


கவிதை எனும் பேரரசி வரவுக்காக
கையில் கோல் பிடித்து
காத்திருந்த நேரமது !!!!!!

பேரரசி வரவின் போதுநான் சற்று
நித்திரை அடைந்து விட்டேன் !!!!!

அவளோ கோபமடைந்து என் நடு
நெற்றியில் ஒரு முத்திரை
பதித்து சென்றாள் !!!!!!

கண் விழித்த பிறகுதான் தெரிந்தது
வந்தது கவிப் பேரரசியல்ல
என் பேரரசி என்று !!!!!!!

ஆம் .
நித்திரையோ நித்தம் இல்லை !!!
ஆனால் ,
முத்திரையோ முத்தம் தான் !!!

எழுதியவர் : ஆரோன் கோபி (23-Nov-18, 9:20 pm)
சேர்த்தது : ஆரோன் கோபி
Tanglish : kathali
பார்வை : 1585

மேலே