Sarah - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sarah |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 4 |
என்னவனே
அயராமல் உன் நிழலையே தேடும் விழிகள்...
உதிரும் உன்சொல்லுக்கு தவமிருக்கும் செவிகள்...
வஞ்சிக்கபட்டதை உணர்ந்தும் உன்வாசம் தேடும்நாசி...
நித்தமும் உன்பெயரை பெற்றெடுக்கும் இதழ்கள்...
சுவாசிக்கிறதோ இல்லையோ
உன்னை எண்ணி துடித்துக்கொன்டே வாழும்இதயம்...
மறப்பேன் மறப்பேன் என
மதியிழந்து உன்னையே உருப்போடும் மூளை...
தென்றலின் தழுவலையும்
உன்னதாய் உணர்ந்து சிலிர்க்கும் என்மேனி....
இப்படி இருபது வருடம்
எனக்காய் இயங்கிய அனைத்தும்
எனக்கெதிராய் சத்தியாக்கிரகம் செய்ய
தோற்றுக்கொன்டே இருக்கிறேன்
உன்னை மறக்கும் முயற்சியில்.....
ஐந்தாண்டுக்கொருமுறை
தேர்தல் திருவிழா! -அப்படியே
காது குத்து விழாவும்!
....................000.............................
ஈழ வியாபாரிகளின்
ஈன வியாபாரம் இம்முறை
தமிழ்நாட்டில் பெரும் நஷ்டம்!
....................000.............................
காந்திய சொரூபிகள்
சாதிய மருவிகளாயினர்
அசிங்கம் அருவியாய் கொட்டுகிறது!
.......................000.................................
இரு நூறுக்குள் (rs 200)
நாற்பது அடங்கவில்லை
மீதம் மூன்று!
.......................000...............................
மஞ்சள் கருப்பு சிவப்பு
அத்தனை நிற துண்டுகளையும்
ஒரு சேலை போட்டு போர்த்தியது!
...............
இதழ் விரித்து இவள்
சிரித்தால் என்
இதயத்தினுள் புன்னகையிடுகிறதே..!
இவள் யாரோ..? என்
முன்ஜென்ம உறவோ...?
சங்கு கழுத்தில் மின்னும்
மெல்லிய பொன்னகையை இவள்
நுனிப்பல்லில் ருசித்தால் -என்
நாவினில் தங்கருசியேறுகிறதே...!
இவள் யாரோ..! என்
இன்சுவை அரசியோ?
கண்ணிரண்டில் முழியுருட்டி இவள்
கதையளக்கும் அழகை கண்டாலே - என்
மயிரிழைகள் சிலிரிக்கிறதே --!
இவள் யாரோ.. என்
புதுக்கவிதையின் நாயகியோ?
இடைவிடா மழை
தலைகோதியபடி நீ
அடிக்கடி சீறும் வான்வழி
மின்னல் போதாமல்
உன் மான்விழி மின்னல்
எது தாக்கியதென்று
தெரியவில்லை
மயக்கத்தில் நான். .........
மதத்தைப் புரிந்தவன்
மனித நேயம் மிக்கவன்.
பயன்ற்று வாழ்பவனே
தீவினைகளில் திளைக்கிறான்.
கூலிக்கு கேடு செய்யும்
காலிகளின் வேலையே
குண்டை வெடித்து
அப்பாவிகளைக் கொல்வதும்
பொருள்சேதம் செய்வதும்.
கெட்டவர்களை நின்று கொல்லும்
தெய்வம் தண்டிக்க
நீண்ட நாள் ஆகலாம்.
ஆறறிவும் இறையறிவின் ஒருபங்கே
நாமதை மறக்காமல்
முடிந்ததைச் செய்து
தீமைகளை முறியடிக்க
விரைந்து செயல்பட்டு
இப்பூவுலகைக் காத்து
நல்ல மனிதராய் வாழ்வோம்.