ilanthamizhan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ilanthamizhan |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : 27-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 23 |
என் தங்க புள்ளைக்கு,
அப்பா இல்லாதப்ப
அம்மா மேல அம்முட்டு பாசம்...
அம்மா இல்லாதப்ப
அப்பா மேல அம்முட்டு ஆசை...
ஆனா எல்லாரும் இருந்தும்
அப்பாகூட விளையாடுற
சொகமே சொகம் தான்...
அத பார்க்குறப்ப
அவன் அம்மாவுக்கு
ஏனோ அம்முட்டு சோக்கம்....
மனவலியும் உடல்வலியும்
மறந்து போகுது,...
என்னை பார்த்ததும்
என் தங்க மகன்
ஓடி வர அழகுல....
என்ன கட்டி புடிச்சிக்குற சோகத்துல....
சோலோ வா இருந்தப்ப
நேனோ வா இருந்த மனசு
நீ வந்ததும்
நீலவானம் மாதிரி நீண்டுடுச்சி...
நிலா மாதிரி அழகாவும் மாறிடுச்சு....
சோலோ வா இருந்தப்ப
நேனோ வா இருந்த மனசு
நீ வந்ததும்
நீலவானம் மாதிரி நீண்டுடுச்சி...
நிலா மாதிரி அழகாவும் மாறிடுச்சு....
அழுதாலும்
அடிபட்டாலும்
அடிமனசுல இருந்து
அடக்கமுடியாம கத்துறது...
ஆசையெல்லாம் அடக்கிவச்சி
ஆளாக்கி பார்க்க
அனுதினமும்
அணையாம எறிஞ்ச
என் அம்மாவை தான்...
அழுதாலும்
அடிபட்டாலும்
அடிமனசுல இருந்து
அடக்கமுடியாம கத்துறது...
ஆசையெல்லாம் அடக்கிவச்சி
ஆளாக்கி பார்க்க
அனுதினமும்
அணையாம எறிஞ்ச
என் அம்மாவை தான்...
புளியங்கொம்பை போன்றது
பெண் மனசு.....
பிடித்து தொங்கவும் முடியவில்லை
வளைத்து ஏறவும் முடியவில்லை
அங்கும் இங்கும்
வளைந்து கொடுத்தாலும்
வலிமையாகத்தான் இருக்கிறது....
நான் தான்
வாட்டி வதைந்து கொண்டுஇருக்கிறேன்....
அடிக்கும் திசை எல்லாம்
சிதறி கிடக்க
எந்தன் இதயம்
காற்றல்ல....
உன்னையே
நினைத்து நினைத்து
கண்ணீர் துளிகளுக்கிடையில்
இறுகி கொண்டிருக்கும்
பவள பாறை......
உனக்கென்று வீசாத காற்றை
நீ சுவாசிக்கும் பொழுது.....
உனக்காகவே சுவாசிக்கும்
எந்தன் உயிரை
உந்தன் இதயத்தில்
விசுவசிக்க கூடாதா?.....