kader ibrahim - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kader ibrahim
இடம்:  paramakkudi
பிறந்த தேதி :  02-Oct-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-May-2010
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  3

என்னைப் பற்றி...




என் படைப்புகள்
kader ibrahim செய்திகள்
kader ibrahim - மே சுரேஷ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2015 4:21 pm

வணக்கம் நண்பர்களே

மேலும்

நீர் பிள்ளையாரோ 28-Jun-2015 10:31 am
kader ibrahim - Venkatachalam Dharmarajan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2015 1:31 pm

வெண்டுறை ..

பாரதத்தை சீர்செய்ய போர்க்களத்தில் கால்பதித்தீர்
மேல்பதவி பெற்றபின்னால் சுற்றியுமை உள்ளோர்
உதவுகிறேன் என்றுசொல்லி பித்தலாட்டம் செய்கின்றார்
எத்தனையோ ஏறுமாறாய் கண்டாலும் சொல்லறுத்து
சும்மா இருக்கின்றீர் நீவீரேன் ?

மேலும்

சாயம் வெளுத்தது 28-Jun-2015 10:26 am
kader ibrahim - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2014 7:06 pm

புத்தம் புது
விடியல்கள்
எனக்கெனப் பிறக்கின்றன!

வெளிச்சத்தைத் தக்க
வைக்க வழியின்றி
இருட்டைப் பரிசளித்து
விடைதருகிறேன் !

காரிருள் கண்டு
பயந்தோடும் அந்தக்
கதிரவனை வைக்க
வேண்டும் வீட்டுச்சிறையில்!

தான் மாசுற்று
இருளகற்றும் நிலவு ..
மன இருளகற்றுபவள் பெண்
தன் தூய்மையால்!

கறை கொண்ட
நிலவென பெண்மையை
களங்கப்படுத்தல்
நியாயமல்ல !!

ஒளியைத் தேடுகிறேன்
ஒளியிலே ஒளிந்திருந்து ..

புலர்ந்திடும் பொழுதுகளைக்
கட்டி வைக்கிறேன் ,என்
நாளைய இரவுகளின்
விடியல்களுக்கு !!

மேலும்

மிக்க நன்றி தோழியே !! 29-May-2014 2:05 pm
புலர்ந்திடும் பொழுதுகளைக் கட்டி வைக்கிறேன் ,என் நாளைய இரவுகளின் விடியல்களுக்கு !! அருமை.. 29-May-2014 11:47 am
நன்றி அக்கா !! 24-May-2014 9:09 pm
மிக்க நன்றி நட்பே !! 24-May-2014 9:08 pm
kader ibrahim - கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2014 6:41 pm

மீண்டும் ஒருநாள்
பூமி உருண்டையின்
கிழக்கு விளிம்பில்
ஒரு விடியலின் பாடகன் வந்தான்
சில விதைக்கூடைகள் கொண்டுவந்தான்

விதைகளில்லை
வெற்றுக்கூடைகள் விரி்த்து
கூவிக்கூவி யழைத்தான்

கனவை விதை
காலங்கள் பூக்குமென்றான்
கற்பனை விதை
கவிதைகள் பிறக்குமென்றான்
கண்ணீர் விதை
பாவங்கள் கரையுமென்றான்
வியர்வை விதை
வெற்றிகள் விளையுமென்றான்

மவுனம் விதை
மயக்கம் தெளியுமென்றான்
மொழியை விதை
தாய்மை குளிருமென்றான்
உண்மை விதை
உள்ளம் செழிக்குமென்றான்
உன்னை விதை
கடவுள் சிரிக்குமென்றான்….!

மேலும்

மழை மழை என் காட்டில் சூறாவளி மழை மழை.. 23-May-2014 3:04 pm
விதைகளுக்கு நீர் பாய்ச்சினீர்கள் நன்றி 23-May-2014 3:02 pm
நன்றி நண்ப, என் பூமியின் விளிம்பு வரை வந்து விதைகளை வாங்கியமைக்கு... 23-May-2014 2:58 pm
நன்றி நண்பரே 23-May-2014 2:55 pm
kader ibrahim - இணுவை லெனின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 7:51 pm

அனுபவம் என்பதன்
உள் அர்த்தம் தந்தை

களைப்பு அறியாத
உழைப்பாளி
நீ கருவறை இல்லாத
படைப்பாளி

எரிமலை எதிர்த்திடும்
தோள்கள் நீங்கள்
எங்கள் எதிர் காலம்
கடத்திடும் கால்கள்

பார்வையால் பதில்
சொல்லும் கண்கள்
அது வெறும் பார்வை அல்ல
எமைக் காக்கும் போர்வை


சிந்தையில் இருக்கும்
சிகரம் தந்தை
முந்தய பிறவியின்
தொடர்பு எந்தை



@####லெனின்####$$

மேலும்

kader ibrahim - இணுவை லெனின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 7:13 pm

பூமி ஓவியப் பந்தில்
தீட்டி வைத்த முதல்
உயிர் வண்ணம் தாய்

ஐம்புலன் அறியாத உயிருக்கு
உலகறிய உடல் தந்தாய்

கரு வீட்டில் சிலகாலம்
தலை கீழாய்
தவம் இருந்தோம்
உனக்கு மகன் ஆகாவென்று

தோற்று தோற்று
இருந்த எனை தேற்றினாய்
பின்பு தனிமையில்
நீ இருந்து தேம்பினாய்
எனக்காய்

எமக்கு துன்பம் வரும் போது
அதன் விம்பமாய்
நீ உடல் மெலிந்தாய்

மண்நோக்கி விழுந்த எம்மை
விண்ணாக உயர வைத்தாய்

பருவங்கள் உருவங்கள்
பலமாறிலும்
பூகோள திசைபோல்
என்றும் மாறா அன்பு
உன்னிடத்தில்
எமக்காய்


******லெனின் *****

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே