எந்தை எனும் தந்தை

அனுபவம் என்பதன்
உள் அர்த்தம் தந்தை

களைப்பு அறியாத
உழைப்பாளி
நீ கருவறை இல்லாத
படைப்பாளி

எரிமலை எதிர்த்திடும்
தோள்கள் நீங்கள்
எங்கள் எதிர் காலம்
கடத்திடும் கால்கள்

பார்வையால் பதில்
சொல்லும் கண்கள்
அது வெறும் பார்வை அல்ல
எமைக் காக்கும் போர்வை


சிந்தையில் இருக்கும்
சிகரம் தந்தை
முந்தய பிறவியின்
தொடர்பு எந்தை



@####லெனின்####$$

எழுதியவர் : இணுவை லெனின் (13-Nov-14, 7:51 pm)
Tanglish : enthai
பார்வை : 67

மேலே