sekar612000 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sekar612000 |
இடம் | : புது டில்லி |
பிறந்த தேதி | : 28-Jun-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 7 |
கவிஞராக ஆசை...
கதை எழுத ஆசை..
பிறர் கண்ணீர் துடைக்க ஆசை...
நாட்டிற்கு சேவை செய்ய ஆசை.....
பாரதியார் மீண்டும் வந்தால்.....
=============================
செந்தமிழ் ஒலித்த நாட்டினிலே
காணவில்லைத் தமிழ்த் தேனடா
தேடிப் பார்த்தும்செவி பருகவில்லை
அமுதமொழி தொலைந்த தெங்கடா???
நாளும் பாலியல்தொல்லைகளில்
நாட்டில் பெண்கள் கதறலடா
இழிமானுட மிருகம் திரிதல் கண்டால்
அவன் தொடை இடுக்கை நீக்கடா!!!
இல வசத்தில்மக்களை சிக்க வைத்து
அரசியல் ஆட்டம் நடக்குதடா - மக்களை
சோம்ப லாக்கிக் குடிகெடுக்கும்
ஆட்டங்கள் அனைத்தும் ஒடுக்கிடடா!!!.!!.
கண்டாங்கி சேலை யழகுபெண்கள்
தெய்வக் கோலக்காட்சிஇன் றில்லையடா
ஜீன்ஸ்மிடி அரைகுறை ஆடையெல்லாம்
நல் லொழுக்கத்திற்கேவந்த மாகே
எனதுள்ளத்தில் நீ போட்ட
அன்பென்னும் அகல் விளக்கு
அள்ளி வீசுகிறது பேரின்ப ஒளிதனை!
அவ்வொளி.. ஆசைதனை அகலாக
இருக்கச் செய்வதால்
அடிக்கடி உறக்கமின்மை!
எதையும் எதிர்பாராமல்
வரும் நட்பை -
எதையாவது எதிர்பார்த்து
இழந்து விடாதே ..........
கசிந்த உன் கண்களின் கண்ணீரை
கண்டேன் இல்லை... கண்டிருப்பின்...
கைகள் கொண்டு துடைத்து..
ஆறுதல் மொழி கூற.. நானோ
அவ்விடமில்லை.. காரணம்..
நம் நட்போ தொலைதூரத்தில்...
கணினியின் வாயிலாய்..!
சவ்வு மிட்டாய் வாங்கி
தின்ற காலம் போச்சே...!
சமூக வலைதளங்களில்
மாட்டிக்கொள்ளும் காலம் வந்தாச்சே..!
நூலகங்களில் சென்று
படிக்கும் காலம் போச்சே...!
கைத்தொலை பேசியில்
கருத்து படிக்கும் காலம் வந்தாச்சே...!
அதிகாலையில் எழுந்து கோலம்
போட்டு வேலை செய்யும் காலம் போச்சே...!
பொழுதெல்லாம் கணினியில் இருந்து விட்டு
காலையிலே குறட்டை விட்டு தூங்கும் காலம் வந்தாச்சே..!