சீருடை தரித்து சீராய் செல்லும் பள்ளி சிறுவர் சிங்காரித்து அலுவல் செல்லும் சீரிய மங்கையர் சரக்கு வாங்க சந்தை செல்லும் மாந்தர் சாரை சலிப்போடு விற்பனை தேடும் வியாபாரி வரிசை ஊரு விட்டு பிற ஊரு சேர பயணிகள் சேரும் ஊர்தியோட்டி ஓடி உந்தும் மனிதர் பலரும்..! நெடி வெடித்து கொல்லும் இந்த தீவிரவாதம் நொடியில் ஒடியும் ஓங்கி வளர்ந்த மனித நேயம் வெடிக்கும் கைகள் அறிவதில்லை கொல்லும் நீதி மடியும் மனிதன் அறிவதில்லை இறக்கும் நீதி ..! எந்த மதம் எக்காளமிடுது மனிதனை கொல்ல அந்த மதம் மடிய வேண்டும் மனிதன் வெல்ல..! மதத்தை இழுத்து மேடைபோடும் மனிதானில்லு மனிதநேயம் தூக்கில் போடாது நீயும் செல்லு..! மனிதா உன் மதம் பிடித்தால் நன்றாய் நீ படித்து செல்..! மனிதா உன் மதம் உனை பிடித்தால் நீ முடித்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடிக்கா நீ அழைத்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடித்தால் நீ விட்டு செல்..! மத நேயம் துறப்போம்..! மனித நேயம் காப்போம்..!


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வைகள் : 57
1
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே