Annapurani Dhandapani- கருத்துகள்

எல்லா தேடலுக்கும் விடை கூகுள் அண்ணாதானே! எனக்கும் அவர்தான் இப்டிக்கா வழிகாட்டினார்! அடடே! இது கூட நல்லாயிருக்கே! என்ற எண்ணினேன்! உடனே இணைந்துவிட்டேன்!

வானம்!

மேகங்கள் காெண்டு தினம் தினம் பல ஓவியங்களைத் தீட்டி என்னை எப்பாேதும் உற்சாகப் படுத்தும் வானம்!

ஒவ்வாெரு முறை வானத்தை பார்க்கும் பாேதும் எனக்கு வைரமுத்துவின் வைர வரிகள்தான் நினைவுக்கு வரும்!

"வானம் எனக்கொரு பாேதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!"

மற்றும்,

"வானமகள், நாணுகிறாள்!
வேறு உடை பூணுகிறாள்!"

என்ற வரிகளை என் உதடுகள் அனிச்சையாக முணுமுணுக்கும்!

நான் மிகவும் நேசித்து ஆனால் கிடைக்காத விஷயம், என் மேற் படிப்பு! பட்டப்படிப்பில் என் திறமையை நிரூபித்தும் எனக்கு பட்ட மேற்படிப்பு மறுக்கப்பட்டது!

ஆனால் பரவாயில்லை! எவ்வளவாே பேருக்கு பள்ளிக் கல்வியே மறுக்கப்படும் நிலையில் என்னை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்த என் பெற்றாேருக்கு நான் நன்றியை கூறிக் காெள்கிறேன்!

ஒரு முறை என் கணவர் காலை அலுவலகம் கிளம்பும் சமயம் எதாே காரணத்தால் பாெறுமையிழந்து காேவப்பட்டார்! கணவர்களின் காேபத்தின் வடிகால் மனைவிகள்தனே! அதை என்னிடம்தான் காட்டினார்!

"பாேய் பால்கனிலந்து குதிச்சு செத்துப் பாே!" என்று என்னைப் பார்த்து கத்தினார்!

எனக்கும் காேபம் வந்ததுதான்! ஆனால் நான் திருப்பிக் கத்தினால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்திருந்தேன்! அதனால் அவரைப் பார்த்து மென்மையாய் சிரித்துவிட்டு,

"ஏய்! இன்னிக்கு வேண்டாம்ப்பா! இன்னிக்கு உங்களுக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்கு! இன்னிக்கு உங்களால லீவ் பாேட முடியாதுல்ல! இன்னாெரு நாள் குதிப்பேனாம்! ஓகே!" என்றேன்!

என் கணவர் அசடு வழிந்தபடி சாரி சாெல்லிவிட்டு தன் அலுவலகத்துக்கு கிளப்பினார்!

நன்றி திலீபன்! விரைவில் படப்பை சமர்ப்பிக்கிறேன்!

BTW நான் ஆண் அல்ல! பெண்! Sir என்று விளித்திருக்கிறீர்கள்! அதனால் இந்த விளக்கம்!

உண்மையில் பேய் என்ற ஒன்று கிடையாது! எனக்குப் பிடிக்காத ஒன்றை இன்னாெருவர் செய்தால் எனக்கு அவர் பேயாவார்! அவருக்குப் பிடிக்காத ஒன்றை நான் செய்தால் அவருக்கு நான் பேயாவன்!

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது பாேல இந்த உலகில் நல்லதும் கெட்டதும் இணைந்தே இருக்கிறது! ஒருவருக்கு நல்லதாக இருப்பது அடுத்தவருக்கு கெடுதியாக மாறும்பட்சத்தில் அந்தக் கெடுதியே பேய் என்று வர்ணிக்கப்படுகிறது! அவ்வளவே!

நான் கடவுளை நம்புகிறேன்! அதே பாேல பேய் என்ற ஒன்று இல்லை என்று திடமாக நம்புகிறன்! அதனாலேயே அதைப் பார்த்ததில்லை! ஒருவேளை உண்மையில் பேய் என்ற ஒன்று இருந்து, அது என் கண் முன்னால் வந்தால், அதைக் கண்டு நிச்சயமாக பயம் காெள்ள மாட்டேன்!

ஏனெனில் அதுவும் கடவுளின் படைப்பாகத் தானே இருக்கும்! கடவுளின் படைப்பைக் கண்டு எதற்கு பயப்பட வேண்டும்? அது எனக்குக் கெடுதல் செய்தாலும் கடவுள் எனக்குக் கெடுதல் செய்ய மாட்டார் அல்லவா!?!?

தமிழ் மாெழி மிகவும் பிடிக்கும்! அதனால் அதில் எதைப் பிடிக்கும் என்று எப்படிச் சாெல்வது?

இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த சாெற்கள் இதாே!

தமிழ், அம்மா, அன்பு, குழந்தை, மலர்கள், வணக்கம்!

இவையே எனக்கு தமிழில் மிகவும் பிடித்த சாெற்கள்!

Great!

I would like to participate in the competition!

Is there any word limit or pages limit for the story or essay?

I am a newbie! Can I participate and submit my writing?


Annapurani Dhandapani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே