மோகனமூர்த்தி- கருத்துகள்

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்

கவினாள்- கவின்+ஆள். கவின் என்றால் அழகு, ஆள் - பெண்பால் விகுதி கவினாள் என்றால் அழகு பெண்.

நன்றி உங்கள் கருத்துக்கள் ஊக்குவிக்கும்

உன்குரல்
இடைவிடாது நீ பேசிக்கொண்டிருக்கையில்
ஒரு புல்லாங்குழல் இசைக்குள் மூழ்கிப்போகிறேன் நான்
ஒரு வனாந்திரத்தில்
ஒற்றை மரத்தடியில்
கொன்றைப்பூக்கள் என்மேல் சரிய
கண் மயங்கிய நிலையில்
ஒரு புல்லாங்குழல் இசைக்குள் மூழ்கிப்போகிறேன் நான்

சிலர் பாடுவதே பேசுவதுபோல் இருக்கும்
நீ பேசுவதே பாடுவது போல் இருக்கும்
உன் காதல் பேச்சில் யாழ் நெளிகிறது
உன் கொஞ்சல் பேச்சில் கிடார் துள்ளுகிறது
உன் கோபப்பேச்சில் ஆயிரம் வயலின் அலறுகிறது

நீ
உரையாடும்போது நான்
கரையாடுகிறேன்
தேன் நதிக்
கரையாடுகிறேன்

நீ
வல்லினம் இன்றிப் பேசும் மெல்லினம்
இசைப்
புல்லினம் ஒன்றாய் பாடும் சொல்லினம்

உன் தொண்டைக்குழிக்குள் வீணை நரம்புகள்
உன்பேச்சில் தெறிக்கும் தமிழ்த்தேன் அரும்புகள்

உன் குரலில் என்னை திட்டியாவது
ஒலிப்பதிவு செய்து கொடு
தூக்கம் வராத இரவுகளில் அதைக்
கேட்டுநான் தூங்கிப்போகிறேன்

இசை அமைதிக்கு ஆற்றுப்படுத்தும்
உன் குரலும் .

மோகா

உங்கள் கவிதைகளில் காதல்வலி
கண்ணீர் வழியே இரத்தத் துளி

எக்காளமிட்டு வரும் உங்கள் கவிதைகளுக்கு
எக்காலமும் நான் அடிமை

நண்பா
வரம் கிடைக்குமென்றால் ஏன்
தலையணையை பேசவைக்கிறீர்கள் நீங்களே
தலையணையாகி விடுங்கள்

நண்பரே
உங்கள் கவிதை
உருட்டு விழிகளின் மிரட்டும் அழகு !

நன்றி நண்பரே
உங்கள் வாழ்த்துக்கள்
என்னை வளர்க்கட்டும்

நண்பரே
எனக்கு எழுத மட்டும் தான் வரும்
ஏனோ என் எழுத்தோடு இசையும் சேர்ந்து கொள்கிறது
நன்றி உங்கள் கருத்துக்கள்தான் என் பேனாவில் மை ஊற்றிக் கொடுக்கும்

உங்கள் கவிதை நிதர்சனம்
அன்புடன் மோகா


மோகனமூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே