saravanakumar thompson- கருத்துகள்

பிச்சை

சற்றே இளைப்பாரலாம் என
பேரூந்து நிலையத்தில்
தடம் புகுந்ததொரு பேரூந்து....

தடுமாறும் வயதினிலும்
திருவோடேந்தி படியேறுகிறாள்
தாயொருத்தி தடியேந்தி.....

பொங்கும் வேர்வையில்
மங்கிய வேர்வையில்
தழு குரலில் மெது நடையில்
ஒரு வேளை பசியாற
படுந்துயரம் ஏராளம் ஏராளம் ....

திடீரென நின்று
எங்கோ கேட்ட குரலென
சற்று தடுமாறி உற்று நோக்குகிறாள்...

கண்புரையால் காட்சி தெளிவின்றி
பின் நடை போடுகிறாள்...

அப்பா பாட்டி!!
என்ற தன் மகனின்
வாயை பொத்தினான்..
பின் இருக்கையில் அமர்ந்திருந்த
இந்த தாயிடம்
பால் குடித்த மிருகம் ஒன்று......

... சரவணகுமார் தாம்சன்

நன்றி... நீங்கள் கன்னியாகுமரி மாவட்டமா ? எந்த ஊரு ? நானும் குமரி தான்..

நன்றி நண்பரே ...
இன்னும் கவிதை எழுத என்னை
உங்கள் கருத்து ஊக்கம் அளிக்கும் ...


saravanakumar thompson கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே