ஒரு திருக்குறளில் ஒரே வார்த்தை நான்கு முறை வருகிறது....நேற்றுதான்...
ஒரு திருக்குறளில் ஒரே வார்த்தை நான்கு முறை வருகிறது....நேற்றுதான் படித்தேன்...சில சோகங்களில் மூழ்கி இருக்கும் என் மனதுக்கு அது ஆறுதல் மட்டும் தாராமல் , என்னைத் தட்டி எழுப்பி நிற்க வைத்தது என்றால் மிகை இல்லை...நாற்பது முறை படித்தாலும் அதன் ஒளியும்,ஒலியும் நெஞ்சு விட்ட அகலாது...
இதுதான் அந்தக் குறள்.
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
துன்பத்திற்கே துன்பம் கொடுப்பர்...துன்பத்தைக் கண்டு துன்பப் படாதவர்...
இதைவிட தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை ஒரு துன்பப் படுபவனுக்கு யாரால் சொல்லி விட முடியும்?...நன்றி வள்ளுவா!