என்னை கவர்ந்த கவி.. நாங்கள் என்னபிழை செய்தோமடி தாயே...
என்னை கவர்ந்த கவி..
நாங்கள் என்னபிழை செய்தோமடி தாயே !!!...
நாகரிகத்தை கற்றுத்தந்த இனம்
இன்று நாடோடியாய் திரிகிறது...
உலகின் மூத்தகுடி இன்று
ஊர் இன்றி அலைகிறது...
வாள்வீசிய இனம் இன்று
வாழ நிலம்கேட்டு நிற்கிறது...
உலகில் எங்கும் சொந்தம்
ஆனால் பெயரோ அகதி...
பெற்றவர் உற்றவர் இன்றி
உறங்குகிறோம் வீதியில் விதியென்று...
யாசககர்களே இல்லாத தேசத்துமக்கள்
யாசகம் வேண்டி நிற்கிறோம்...
சோகங்களை சொல்லி அழுதோம்
அதைவைத்து அரசியல் செய்கின்றனர்...
இழவு வீட்டில் முதலிடம்
வேண்டி தடை செய்கின்றனர்...
நாங்கள் இறந்தாலும் இருந்தாலும்
அவர்களுக்கு அரசியல் ஆதாயம்...
உணவு கொடுப்பார் யாருமில்லை
உபவாசம் செய்பவர் ஏராளம்...
வலிக்கிறது எங்கள் ரணம்
தீர்ப்பதற்கு யாருக்குமில்லை மனம்...
நாங்கள் என்னபிழை செய்தோமடி
தாயே தமிழனாய் பிறந்ததை தவிர!!!!