எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முத்தம் ஆத்மாநாம் கவிதைகள் ஏதாவது தளத்தில் இருக்கிறதா என்று...

முத்தம்

ஆத்மாநாம் கவிதைகள் ஏதாவது தளத்தில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து கிடைத்தது இந்தக் கவிதை. கவிஞன் நிரந்தரமானவன்; அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை.

முத்தம்

முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம்

கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்

மறந்துவிட்டு

சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்

ரயிலடியில்

நூலகத்தில்

நெரிசற் பூங்காக்களில்

விற்பனை அங்காடிகளில்

வீடு சிறுத்து

நகர் பெருத்த

சந்தடி மிகுந்த தெருக்களில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க

ஸாகஸத்தைத் தெரிவிக்க

இருக்கும் சில நொடிகளில்

உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தைவிட

சிறந்ததோர் சாதனம்

கிடைப்பதரிது

ஆரம்பித்து விடுங்கள்

முத்த அலுவலை

இன்றே

இப்பொழுதே

இக்கணமே

உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி

காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்

கிறிஸ்து பிறந்து

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து

இருபத்தியோறாம் நூற்றாண்டை

நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து

சுத்தமாக

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம்

கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்

மறந்துவிட்டு

சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்

ரயிலடியில்

நூலகத்தில்

நெரிசற் பூங்காக்களில்

விற்பனை அங்காடிகளில்

வீடு சிறுத்து

நகர் பெருத்த

சந்தடி மிகுந்த தெருக்களில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க

ஸாகஸத்தைத் தெரிவிக்க

இருக்கும் சில நொடிகளில்

உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தைவிட

சிறந்ததோர் சாதனம்

கிடைப்பதரிது

ஆரம்பித்து விடுங்கள்

முத்த அலுவலை

இன்றே

இப்பொழுதே

இக்கணமே

உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி

காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்

கிறிஸ்து பிறந்து

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து

இருபத்தியோறாம் நூற்றாண்டை

நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து

சுத்தமாக

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்

பதிவு : Rangarajan Sundaravadivel
நாள் : 15-Nov-14, 9:31 pm

மேலே