எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று...

நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்....
பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் இருக்கை இல்லாததால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருந்தது....
எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்.. அவளை பெண் என்று சொல்வதா சிறுமி என்று சொல்வதா என்று தெரியவில்லை...
நிச்சயம் எட்டாவதோ பத்தாவதோ படித்து கொண்டிருக்கலாம்....
அவள் பள்ளி சீருடையில் இருந்தாள் நல்ல உயரமும் நிறமும்.... அழகாக இருந்தாள்...
முகத்தில் இன்னமும் குழந்தை தனம் மிச்சம் இருந்தது....

அவள் அருகில் ஒரு ஆடவன்.... அவன் கல்லுரி படிப்பவனகவோ வேலைக்கு செல்பவனகவோ இருக்கலாம்....
வெகு நேரமாக அவளது கைகளை பிடித்து விளையாடுவதும் கன்னத்தை கிள்ளுவதுமாக இருந்தான்....
அவளும் சிரித்து கொண்டே இருக்க அவர்களது கலாட்டாவை பேருந்தில் இருந்த அனைவருமே கவனிக்க ஆரம்பித்தனர்.....
மிகவும் சத்தமாகவும் பிறரை சங்கட படுத்தும் விதமாகவும் அவர்களின் பேச்சு இருந்தது...
அவர்களின் பேச்சிலிருந்தே அவளது பள்ளிக்கு அருகே இவன் கடை வைத்திருப்பதும் ஒரு வரமாக தான் பேச தொடங்கி இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது....
அவனது பார்வையோ, பேச்சோ நிச்சயம் சரி இல்லை என்பது எனக்கு புரிந்தது அவளுக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை என்று தான் தோணியது...
ஒரு கட்டத்தில் அவள் தன் ரெட்டை ஜடையை முன்னால் எடுத்து போடுவதும் இவன் அதை பின்னால் எடுத்து போடுவதுமாக ஆரம்பித்தார்கள்....
மகள்கள் இருக்கும் எந்த தாய்க்கும் தங்கைகள் இருக்கும் எந்த அக்காவுக்கும் இதை பார்த்தால் நிச்சயம் கோபம் வரும்... எனக்கும் கோபம் வந்தது அனால் என்னவென்று கேட்பது....
உங்களுக்கு என்ன வந்துச்சுன்னு அவள் கேட்டாள் என்ன சொல்வது.......

அவள் கழுத்தில் id கார்டு இருப்பதை கவனித்தேன் அதில் அவளது பெயரும் சில தகவலும் தெரிந்தது...
அவளது அப்பாவின் பெயர் மோகன் என்பதும் அவர் டைலர் என்பதும் இருந்தது....

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளை பெயர் சொல்லி அழைத்தேன்
பஸ்ல இப்படி தான் கத்துவியா அறிவில்ல... என்றேன்
அவள் மலங்க மலங்க விழித்தாள்...
யார் இவன் என்று கேட்டேன் அவள் நிச்சயமாக பயந்து விட்டால் என்பது அவள் விரல் நடுக்கத்திலேயே தெரிந்தது..... அவனோ என்னை பார்த்து நீங்க யாரு என்று கேட்டான்...
நன் அவளை பார்த்து நீ மோகன் அண்ணாவோட பொண்ணு தான உங்க அப்பா டைலர் தான என்று கேட்டேன்.... அவன் உடனே சாரிங்க சும்மா ப்ரண்ட்லியா தான் பேசிட்டிருந்தேன்... என்றான்...
நா அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன் ஸ்கூல் போற வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா உங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லனுமா என்றேன்....
அவளோ அக்கா அக்கா சாரிக்கா தயவு செஞ்சு சொல்லிடாதிங்க இனிமே இப்படில்லாம் நடந்துக்க மாட்டேன் என்றாள்... நான் அவனை திட்டவும் இல்லை பேசவும் இல்லை....

அவளிடம் திரும்பி சொன்னேன் உங்க அப்பாக்கு தெரிஞ்சவங்க நெறைய பேர் இங்க இருக்கோம் இன்னொரு தடவ இவன் கூட உன்ன பார்த்தேன் உங்க அப்பகிட்ட தான் சொல்ல வேண்டி இருக்கும் என்றேன்....
அவன் அங்கிருந்து எழுந்து போய் பின்னால் நின்று கொண்டான்...
அவள் மிகவும் பயந்து போய்விட்டாள்...
நன் மெல்ல அவளிடம் சொனேன் ந உங்க அப்பா கிட்ட ஏதும் சொல்ல மாட்டேன் இத வயசுல பசங்க பாக்குறதும் சிரிக்குறதும் விளையாட்ட தெரியலாம் ஆனா வாழ்க்கைல அது உனக்கு ரொம்ப பெரிய பிரச்சனையாகிடும் என்று சொன்னேன்.....
அவளுக்கு புரிந்திருக்கும் புரிய விட்டாலும் பிரச்னை இல்லை குறைந்தது இந்த பயத்திலாவது இனி சரியை நடந்து கொள்வாள் என நினைக்கிறேன்...

மதிப்பிற்குரிய தோழமைகளே இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது "clean india " என்பது குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்வதில் இல்லை....
இவனை போன்ற குப்பைகளிடம் இருந்து பெண் குழந்தைகளை பிரித்து சுத்தம் செய்வதில் தான் இருக்கிறது என்று தோன்றுகிறது......

நாள் : 13-Dec-14, 2:40 pm

மேலே