எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நேரங்களில் சிலரின் வார்த்தைகளை உண்மை என்று அவர்களின்...

சில நேரங்களில் சிலரின் வார்த்தைகளை உண்மை என்று அவர்களின் மீதான அதீத அன்பின் காரணமாக கண்மூடித்தனமாக நம்பிவிடுகிறோம். இதுவே நமக்கு பின்னோரு நாளில் மன உளைச்சலை தருகிறது.

நாணயத்திற்கு இருபக்கம் போல
பிரச்சினைக்கு நாமும் ஒரு காரணமே..!

மறுக்க முடியாத உண்மையிது..!

அடிக்கடி மன உளைச்சல் வருவதும் போவதும் எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

என் மன உளைச்சலுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பிறரின் கண்ணியத்தின் மீதான தவறான என் கணிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. இதை நன்றாக புரிந்துக்கொண்டு விட்டதால் மன உளைச்சல் கூட இப்போது அழகான கவிதையை தருகிறது.

புரியாமல் விட்டு சென்றவர்களுக்கு என் நன்றியினை சொல்லிக்கொள்வதுண்டு. அவர்கள் தானே என்னையே எனக்கு புரிய வைத்து செல்கிறார்கள்.


அன்பு என்பதே ஏமாற்றுக்காரர்களின் ஆயுதமாகிவிட்டது எனும் போது ஏமாற நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனி மரம் தோப்பாகாது என்பார்கள்.

” நான்” என்ற தனி மரம் தோப்பாகவிட்டாலும் ஒரு நாள் வளர்ந்து சாதனை படைக்கும்.
சாதனை படைத்த பிறகு இந்த தனி மரமே ஒரு சாதனை தோப்பு என்று பாராட்டும் இந்த கேடு கெட்ட உலகம்..!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 14-Dec-14, 10:39 am

மேலே