ஒரு நீளமான நாடாவை சுருட்டி வைக்க முயல்கிறொம் என்று...
ஒரு நீளமான நாடாவை சுருட்டி வைக்க முயல்கிறொம் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் சிறிய சுற்றாகி, சில சமயம் கையலிருந்து வழுக்கியும், ஒரு சுற்றுக்கு குறைந்த
நீளமே குறைகிறது.
முனைந்து சுற்ற உருளை பெரிதாக கையில் அடங்க, ஒவ்வோரு சுற்றிர்க்கும் அதிக நீளம்
குறைகிறது.
வாழ்க்கையும் அப்படித்தான்.....
ஆரம்பத்தில் வைக்கும் ஒவ்வொரு அடியும் (steps) கடினமாகவும் பலன் குறைவாகவும்
இருக்கும். முயன்று முன்னேறினால் ஒவ்வொரு அடியும் சுலபமாகவும் பலன் அதிகமாகவும்
கிட்டும்....
தத்துவம்...?
பின் குறிப்பு; கால் கட்டிலிருந்த கழட்டிய crepe bandage-ஐ சுற்றி வைக்கும் போது உதிர்ந்தது.
.(இம்சை தாங்கலீங்களா....? Sorry)