எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியாவின் மகனே! ஒரு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி...

இந்தியாவின் மகனே!

ஒரு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த இவன் எப்படி இந்திய மகன் ஆவான்?
கோபம் வருகிறதா??

இந்தியா முழுக்க மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய சம்பவம் 'நிர்பயா சம்பவம்'
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று பல அமைப்புகள் போராட்டம் நடத்தின............

அதே,போன்று வலை தளங்களில் 'கற்பழிப்பு காரணம் என்ன' விவாதங்கள் அரங்கேறின........

இந்திய ஆண்கள் ,கலாச்சார ,பண்பாட்டு கொந்தளிப்புக்காரர்கள் ஒன்றுப் பட்டு ஒரே குரலில் ஓலம் இட்டனர்.............பெரும்பான்மை இந்திய ஆண்கள் அதனையே வழிமொழிந்தனர்...........

ஆம்! கற்பழிப்புக்கு காரணம் இரவில் ஒரு பெண் வெளியில் போவது !!

கதறி ,கதறி தன்னுடைய இந்த எண்ணத்தை பதிவு செய்ய முயன்றனர் ..........




உலகம் முழுக்க உங்களில் ஒருவன் பதிவு செய்து விட்டான்.

'முகேஷ் சிங்' .............
அவனுடைய பேட்டியில்

















1.அவ ஏன் 9 மணிக்கு மேல வெளியில் வந்தால்??இப்படி சுற்றுபவள் நல்ல பெண்ணா?
2.உடன் பட்டு இருந்தால் இறந்திருக்க மாட்டாள்?

கேடுகெட்ட,கேவலமான இந்த.................. சொன்னது

முதல் பகுதி இந்திய மகன்களின் எண்ணம்.

ஏனெலில்,
கலாச்சார போர்வையில் பெண்ணை சுற்றி வைக்கவே ,இந்த சமூகம் ,இந்திய சமூகம் விரும்புகிறது...........

மதங்களும்,சம்பிரதாயங்களும்,சடங்குகளும் பெண்ணை அடிமை படுத்தவே விரும்புகின்றன.........

இந்த சூழலில் ,வளரும் ஆண் மகனும் இதையே பிரதிபலிக்கிறான்........

முகேஷ் சிங் போன்றோர் ஒரு படி மேல் சென்று கேடு கெட்ட செயல் செய்கின்றனர்


குறிப்பு:
நிர்பயாவை மட்டும் 'இந்தியாவின் மகள் 'என்று கூறி ஒரு ஆவணப் படம் எடுத்து உலகிற்கு சொல்ல முடியாதது....

எத்தனையோ பெண்கள் அந்த அந்த இடங்களில் ,பகுதிகளில் ஆதிக்க சாதியினரால் கற்பழிக்க படும் சம்பவமும் நடந்து கொண்டு தான் உள்ளது.....

சென்ற வருடம் 900 தலித் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானதாக ஆய்வுகள் சொல்கிறது.......[இது,வெளியில் வருவதே இல்லை]

இந்தியா சிக்கலான சமூக அமைப்பை கொண்டது .............இங்கே,சாதிக்கு ஒரு நீதியே உள்ளது.........

நீண்ட நெடும் பாரம்பரியம் ,கலாச்சாரம் கொண்ட நம் தேசம் 'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் 4 ம் இடமும்,30 நிமி ஒரு பெண் கற்பழிக்க படுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன........

நாம் நம் 'தாய்'மொழி ,என்போம்
'தாய் நாடு' என்போம்
'கங்கை,காவேரி 'என நதிகளை புகழ்வோம் .


பெண்களை மட்டும் வீட்டுக்குள் பூட்டிவைத்து கொள்வோம்


நமக்கு,நம்ம 'கலாச்சாரம் தான் முக்கியம்'

பதிவு : gowthami
நாள் : 11-Mar-15, 12:39 pm

மேலே