#இரவு யாதுமற்ற பெருவெளியில் யாதொரு இலக்கு இல்லாமல் சுற்றித்...
#இரவு
யாதுமற்ற பெருவெளியில்
யாதொரு இலக்கு இல்லாமல்
சுற்றித் திரிகிறேன் யான்...
தூக்கத்தை சிலருக்குமாயும்
துக்கத்தை பலருக்குமாயும்
வழங்கும் வல்லமை
இரவுக்கு மட்டுமே முழுவதுமாய் வாய்த்திருக்கிறது..
ஒவ்வொரு புரள்களிலும்
புதைந்து போகிறேன் காரிருள்களில்..
கைகள் பலவாய்
நீண்டு வழிகாட்டுகின்றன
கனவெனும் சிறுநாடகத்திற்கு..
ஒவ்வொன்றிலும் ஒரு கேரக்டர்.,
போலீசாயும் திருடனாயும்
சித்தரிக்கப்படுகின்றேன் யானொருவனே..
துப்பாக்கி குண்டிற்கு
ஓட முயன்று
ஓட முடியாமல்
ஓடிந்து விழுகையில்
இரையாக்கப்படுகின்றேன் யான்..
சட்டென்று வீசப்பட்டு விலகி விழுகிறேன்
சிறுநாடகத்திலிருந்து..
டீ விக்கும் கிழவனின்
சைக்கிள் பெடல் சப்தமும்
தூரத்து நெடுஞ்சாலையின்
அவசர ஆம்புலன்ஸின் சப்தமும்
அந்த இரவின் நீளத்தை நீட்டித்து சொல்கின்றன...
எப்போது விடியும்
என அறியவும் முடியாமல்
அகலவும் முடியமால்
மெதுவாய் முக்கி கரைத்து கொண்டே போகிறேன்
என்னை...
ஒருவாறாக நினைவுச் சுழல்களால்
அலைக்கழிக்கப்பட்டு ஓரமாய்
ஒதுங்கி உறங்கியும் போகிறேன்..
ஓரமாய் அமர்ந்து
தன்னை இன்னும் நீட்டித்துச் செல்கிறது
அந்த இரவு...
#யசோக்