எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'இறுதி தேர்வு பட்டியல்' கடந்த மாதத்திற்கான 'இறுதி தேர்வு...

'இறுதி தேர்வு பட்டியல்'

கடந்த மாதத்திற்கான 'இறுதி தேர்வு பட்டியல்' விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்பினில் இவ் எண்ணத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் என்னுடைய தனிப்பட்ட எண்ணம். இதில் உள்ள சரி, பிழைகளை நீங்கள் தான் கூறவேண்டும்.

இறுதி தேர்வு பட்டியல் எந்த வகையினில் தரப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றது என்பது புரியாத புதிராக உள்ளது. தயவு செய்து தரமான படைப்புக்களை மட்டும் தெரிவு செய்யுங்கள். 'எழுத்து' தளத்துக்கு என்று ஒரு மரியாதை , அங்கீகாரம் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு தெரிவு செய்தால் நல்லது என்று எனக்கு தோன்றுகின்றது.

கவிதை -
1. இவ் தலைப்பினில் தெரிவு செய்யும் பொழுது குறைந்த பட்ச கவிவரிகளை தீர்மானித்தல் வேண்டும்.
2. வேறு போட்டிகளுக்காக படைக்கப்பட்ட படைப்புக்களை தவிர்த்தல் வேண்டும். அதன் மூலம் மேலும் சில சிறந்த படைப்புக்களை பட்டியலினுள் உள்ளீர்க்க முடியும்.
3. சொந்த படைப்புக்களை மட்டும் தேர்வு செய்தல் வேண்டும். மீள்பதிவுகளையும் தவித்துக் கொள்ளலாம்.

சிறுகதை -
1. சொற்களின் எண்ணிக்கை அல்லது பக்கங்களின் எண்ணிக்கை வரையருககப்படுதல் வேண்டும்.
2. தொடர் கதைகளை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

நகைச்சுவை -
1. வரிகளின் எண்ணிக்கை - வரையறுத்தல் அவசியம்
2. கதை வடிவில் அமைந்திருத்தல் கூடுதல் சிறப்பு.
3. கொஞ்சமேனும் சிரிக்கக்கூடிய தரமானவற்றை தேர்வு செய்தல் வேண்டும்.


இது மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படும் கட்டமைப்பைக் கொண்ட பகுதி என்றாலும் பட்டியலுக்கு தேர்வு செய்யப்படும் படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக இருத்தல் சிறந்தது. நீண்ட காலமாக தளத்தில் இருக்கும் - இன்றுவரை 'தமிழ் பித்தன்' அல்லது 'எழுத்தாளர்' என்ற விளிப்புடன் இருக்கும் சிறந்த படைப்பாளிகள் இன்றுவரை பரிசு பெறவில்லை. மாறாக புதிதாக வந்த - பெரிதாக படைப்புக்களை படைக்காதவர்கள் இலகுவாக பரிசினை தட்டி செல்கிறார்கள். அதுவும் ஒன்றுக்கு ரெண்டு, மூன்று முறை என்று.

தயவு செய்து எழுத்து குழுமம் இதில் சற்று கூடிய கவனம் எடுத்து எழுத்து தளத்திற்கான அங்கீகாரத்தில் எந்த குறைவினையும் ஏற்படவிடாது இன்னும் இன்னும் தரத்தினை உயர்த்தி செல்ல வழிகோல வேண்டுகின்றேன்.

நன்றிகள்

தோழமையுடன் உங்கள் தோழி
சந்திரா

பதிவு : சந்திரா
நாள் : 11-Apr-15, 3:37 pm

மேலே