எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் அன்பு நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் , வணக்கம்...

என் அன்பு நண்பர்களுக்கும்
சகோதர சகோதரிகளுக்கும் ,
வணக்கம்

சந்தோஷ் குமார் அவர்களின் முடிவை நான் வழிமொழிகிறேன் . பாராட்டுகிறேன் . அவரின் திறந்த மனதையும் , உள்ளத்தின் ஊற்றையும் புரிந்துகொண்டேன். இதைதான் நானும் எழுத வேண்டும் என்று சில நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன் . அவர் முந்தி கொண்டு விட்டீர். எல்லாவற்றிலும் அவர் அப்படித்தானே. வயதை தவிர.

எனக்கும் இந்த எண்ணம் துளிர் விட்டு வளர ஆரம்பித்து பல வாரங்களாகி விட்டது. நீங்கள் சொல்வதை , நான் ஏற்கனவே பலமுறை கருத்துக்களிலும் , சில விவாதங்களிலும் வலியுறுத்தி சொல்லியுள்ளேன் . புள்ளிகள் போடுவதையே நீக்கி விடுங்கள் என்று ஆலோசனையாகவும் நிர்வாகத்திற்கு சொல்லி உள்ளேன்.
நல்ல முடிவு இது. ஆனால் என்றும் கருத்துக்கள் வரவேண்டும் .. தவறுகள் சுட்டிக் காட்டப் படவேண்டும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

இதே போன்று எனக்கு விடுகைகளும், மின்ன்னஞ்சல் மூலமாகவும் , அலைபேசி மூலமாகவும் சில வாரங்களுக்கு முன்னால் வந்தன.

உங்கள் எண்ணமும் அறிவிப்பும் , மன்னிக்கவும் நம்முடைய எண்ணமும் உணர்வும் ஒன்றே எனபதில் மகிழ்ச்சியே.
இதையே என்னுடைய வேண்டுகோளாகவும் எடுத்து கொள்ளும்படி அன்பு நண்பர்களுக்கு , நட்பு வட்டத்திற்கு , எழுத்து குழுமத்திற்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.

என்றும் என் கவிப்பணி தொடரும். எண்ணங்கள் எழுத்தாகும் .
கருப் பொருள் கவிதையாகும் . இதை என்னை உணர்ந்தவர்கள் வரவேற்பார்கள் , தவறாக நினைக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் . எழுத்து நிர்வாகம் உட்பட .
எந்த வித தவறான நோக்கத்திலோ , எண்ணத்திலோ இதை நான் சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு புள்ளிகள் போடுவதை நான் தடுக்கவில்லை. அது அவரவர் விருப்பம். அவர்கள் விரும்பும்வரை. இதுவரை எனக்கு புள்ளிகள் அளித்து , என்னை வாழ்த்தியதற்கும் , என் மேல் உள்ள அன்பால் நட்பால் ஊக்கம் அளிக்கும் என்ற வகையில் புள்ளிகள் இட்ட அனைவருக்கும் நன்றி. அதை என்றும் மறவேன் . இதனால் நம் நட்பு சிதறாது. மாறாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன் . இதனால் என் படைப்புகளை படிக்காமல் விட்டு விடாதீர்கள் . எனக்கு புள்ளிகள் இடுவதை நிறுத்தி விடுங்கள் கருத்துக்கள் முடிந்தால் , விருப்பம் இருந்தால் பதிவு செய்திடுங்கள் .வரவேற்கிறேன்

நான் மற்றவர்களுக்கு வழக்கம் போல கருத்தும் , புள்ளிகளும் வழங்குவேன் நீங்கள் தடுக்காதவரை, விரும்பும்வரை.

எனக்கும் பரிசு முக்கியமல்ல , உங்கள் அன்பும் , வாழ்த்தும்தான் தேவை என்றும் நிலையாய் .

வணக்கம் நன்றி .

என்றும் அன்பு நண்பன் , சகோதரன்
பழனி குமார்

நாள் : 2-Feb-14, 8:26 am

மேலே