எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுள் மோதிய முகமே .. ~~~~~~~~~~~~~~~~~~~~ பக்குவ நிலைகளை...

என்னுள் மோதிய முகமே ..
~~~~~~~~~~~~~~~~~~~~

பக்குவ நிலைகளை
படர வைக்கும் நொடிகளிவை ..

தன்னிலை மறந்து
உடைந்து போகாமல் ..
அனுபவ கோடுகளில்
ஆழ்மனதை மூழ்க வை ..

முடங்கி கிடக்கும்
மூளையை ..முற்றிலும்
முயலும் திசைக்குள்
தினசரி திருப்பு ..

நிரந்தரமற்ற மாற்றங்களில்
நிச்சயம் நீ .
வெற்றிகென நிற்கிறாய்

எதோ ஒன்றில் மட்டுமே
எல்லாம் அடங்கி உள்ளது ..
உன்னில் உலவும்
மெய் உருவமற்ற
உணர்வை போல ..

நகரும் கணங்களில்
உன் ரணங்கள் உதிரும்...

உனது ஒவ்வொரு உள்வாங்கலும்
உயர் வெளிபாடென
உன்னை உருவாக்கும் .... 

- தேன்மொழியன்

பதிவு : காதலாரா
நாள் : 30-May-15, 2:08 am

மேலே