பிறப்பரியா பெரும்பாவி காடு மேடு எல்லாம் உருண்டு எழுந்து...
பிறப்பரியா பெரும்பாவி
காடு மேடு எல்லாம் உருண்டு எழுந்து
கருணையுள்ளம் பல தேடி
கண்ணிருடன் நான் நடந்தேன்
முல்லை மலர் படுக்கை ஒன்று
வா என்று அழைத்து
வாரி அணைத்து
முத்த மழை பொழிந்து
முழு இரவும் தூங்க வைத்து
விடிந்ததும் என்னை வெளிஏற்றி
முடங்கி விடாமல்
உன் கருவறையை கண்டு பிடிக்க
முடியா விட்டாலும்
உன் கல்லறையை கண்டு
கண்ணீரோடு கலங்கி
எனக்கு என்ன எதிர்பார்ப்பு
இனி ஏதும் வேண்டாம்
எண்ணில் இருந்து புறப்படும்
சாரல் காற்றை நம்பி
சரியான தருணத்தில்
ஏறு,மாட்டோடு
எல்லை இல்லா நம்பிக்கையும் புன்னைகையும்
உனக்குள்ளே ஒன்று சேர
அனைத்தையும் விளைவித்து அறுவடை செய்து கொள்ளும்
ஏ !!!!
உழவனே !!!
உனக்கு கருவறையும் உண்டு....
கல்லறையும் உண்டு .....
வாழ்த்துகிறேன் ...
வணங்குகிறேன் ....
என் கருவறையை கொஞ்சம் கண்டு பிடித்து தா ..
உன் காலடியில் நித்தமும் .
என் கண்ணீருக்கு பதிலாக
வண்ண மலர் பல தூவி உன்னை
வணங்கி மகிழ்கிறேன்
இப்படிக்கு
பிறப்பரியா பெரும்பாவி