கண்ணதாசன் அவர்களின் செப்பு மொழிகள்.... சிறுகூடல் பட்டியில் கவியரசு...
கண்ணதாசன் அவர்களின் செப்பு மொழிகள்....
சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய தினத்தில் கவி அரசரைப் பற்றிய கவிதைகளை அவரது இல்லத்தில் நிறைய பேர் வாசித்தார்கள். அன்றைய விழாவில் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய இரண்டு புத்தகங்களை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டார்கள். அந்த நூலிலுருந்து கண்ணதாசன் அவர்களின் முத்தான வாசகங்கள் சில இதோ....
கரும்புக்கு இனிப்பு எவனால் வந்ததோ, அவனால்தான் வேம்புக்குக் கசப்பும் வந்தது..!!
ஒழுங்காகச் சம்பாதித்து பணக்காரனானவனும் குறைவு, உண்மையைப் பேசிப் பதவிக்கு வந்தவனும் குறைவு...!!
"மனிதன் குரங்கில் இருந்துதான் பிறந்தான்" என்றார்; டார்வின் தத்துவத்தில் எனக்கு சந்தேகமே இல்லை; ஒவ்வொரு மனிதனும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறான்...!!
ஏராளமான ஜனங்கள் புத்திசாலிகளாய் இருக்கிற நாட்டில்தான், சர்வாதிகாரம் சீக்கிரம் வருகிறது...!!
அறிவாளிகளுக்கு அறிவுதான் அதிகம்; முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்....!!
வயது ஆக ஆக தலை முடி நரைத்துப் பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்துவிடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால், நாட்டில் குழப்பமே இருக்காது..!!
கொம்பில்லாத மாடுகள் கிராமங்களில் இருக்கின்றன; மூளை இல்லாத மனிதர்கள் நகரங்களில் இருக்கிறார்கள்...!!
நன்கொடை என்பது என்ன?? வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது; கொடுப்பவனை நன் (None) னாக ஆக்குவது..!!
http://www.vikatan.com/news/article.php?aid=48471&utm_source=vuukle&utm_medium=rss&utm_campaign=vuukle_referral#vuukle_div
கண்ணதாசன் அவர்களின் செப்பு மொழிகள் இன்னும் வரும்.......