படித்ததில் பிடித்தது. பகிர்ந்து கொள்கிறேன் !! நீடித்த ஆயுள்...
படித்ததில் பிடித்தது. பகிர்ந்து கொள்கிறேன் !!
நீடித்த ஆயுள் வரமா..,சாபமா ?
மருந்தும் மருத்துவமும் கண்ட மகத்துவம் இன்று நீடித்துக்கொண்டே போகும் மனித ஆயுள்!
வீட்டுக்கு வீடு வயதான கிழவர்கள்,வியாதியும் வலியும் அவர்களின் இணைபிரியாத் தோழர்கள்!
உடலினால் சாதிக்க இனி ஏதுமில்லை, உண்ணல் உறங்கல் தவிர வேறு வேலையும் இல்லை
சுமையில்லா வாழ்வில சுவையேதுமில்லை,சுவையில்லா வாழ்வில பிடிப்பேதுமில்லை.
கண்களில் கனவில்லை கைகளில் வலுவில்லை, எண்ணங்களை வெளியிட வடிகாலும் தென்படவில்லை
கருத்தினில் தெளிவில்லை,கற்பனைக்கு சிறகில்லை, கருத்துப்பரிமாறலுக்கு கனிவான நண்பரில்லை
உரையாடவோ,உண்ணவோ நேரமின்றி நம் மக்கள்,உழைத்து தேடிவரும் ஊதியமும் சேமிப்பும்
பெற்றவர்களை உயிர் வாழவைக்க!! மருந்தும் மருத்துவமும் ஊதியே மாயம் ஆக்க
உதிரத்தில் சர்க்கரையும், உள்ளத்தில் கசப்பும் ஊசியும் மாத்திரைகளும் உடன் பிறப்புகளாக
மூட்டு வலியும் மூச்சிரைப்பையும் மூலதனமாகக்கொண்டு முணகியே வாழும் இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?
கஷ்டப்பட்டு குழந்தைகளை நாம் வளர்த்தது மெய்தான்.அதற்காக ஆயிரம் பிரச்சினைகள் நடுவில் அவர்களுக்கு
நாமும் பெரும் சுமையாக இருப்பதுசரிதானா..?
நீயே சொல் ஆண்டவனே...!