எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இமயம் உன் காலடியில் உலகம் உன் கைப்பிடியில் என்றீர்கள்.......

இமயம் உன்

இமயம் உன் காலடியில்
உலகம் உன் கைப்பிடியில் என்றீர்கள்....

       உலகை உலா வர
       உறுதிகொள் என்றீர்கள் .......

பண்பை பாடமாக்கி
அன்பை அருமருந்தாக்கீனீர்.....

     ஏட்டுச்சுரக்காய் போதாதென்று
      உன்னில் உன்னைத்தேடு என்றீர்கள்.....

சோதனையுற்ற பொழுதெல்லாம்
சாதனைப் பட்டியல் வாசீத்தீர்கள்.....

      தரணியில் தலைநிமிர்ந்து வாழ
      தாய்த்தமிழ் கற்றுத்தந்தீர்கள்......

அன்பை ஆயுதமாக்கு-அறிவை
விரிவு செய் -உலகே
உன்னை உற்றுநோக்குமென்றீர்கள்!!!

[ அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ]



நாள் : 5-Sep-15, 8:49 am

மேலே