நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளில்...
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்
துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்களிலும்
சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.
சென்னையில் மட்டும் விஜய் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை, சென்னை, கொச்சி, ஹைதராபாத் என மொத்தம் 32 இடங்களில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படம் வரும் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்துக்கு இன்னும் வரிச்சலுகை கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்
வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடைபெறுகிறது.