எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாளைய சந்தேகம் பாலைவனம் இல்லா பச்சை வண்ணம் பார்க்கமுடியுமா...

நாளைய சந்தேகம் 
      
  பாலைவனம் இல்லா
      பச்சை வண்ணம்  
   பார்க்கமுடியுமா 
         என சந்தேகம் !!!

 வானத்தின் நிஜ
    நிறம்  பார்போமா
 என சந்தேகம்!!!

 ரேசன் கடையில்
   அரிசி பருக்கை 
 பார்க்க முடியுமா
     என சந்தேகம்!!!

 பொங்கல் விழாவில்
        எதை வைத்து 
 சமைப்பார்கள் 
     என சந்தேகம்!!!

  எந்த சாக்கடையில்
      உள்ள தண்ணிர் 
குடிப்பார்கள் 
      என சந்தேகம்!!!

அந்த சாக்கடையில்
  கூட தண்ணீர் 
பார்க்க முடியுமா 
     என சந்தேகம்!!!

இதழ்கள் 
    சண்டைபோடும்
முத்ததில் நிஜ 
       காதல்  இருக்குமா
என சந்தேகம்!!!

மாநிலத்திற்கு 
   ஒரு விவசாயி
ஆவது இருப்பாரா
    என சந்தேகம்!!!
    

 இதை விட 
     மனிதர்கள் ஊனம்
இல்லாமல் 
   பிறப்பார்களா
என்பதே  சந்தேகம்!!!

                  ₹சிபி ₹
     
      

நாள் : 6-Oct-15, 5:05 pm

மேலே