அன்பு மகளே... சோம்பலாய் படுத்தால் படுக்கை ---------------------- உனக்கு...
அன்பு மகளே...
சோம்பலாய் படுத்தால் படுக்கை
---------------------- உனக்கு சாக்காடு
எழுந்து நட பூமி
-------உனக்குப் பூக்காடு
படுத்தே கிடந்தால்
--------------வாழ்க்கை உனக்குப் படுக்கையாகிறது
விழித்து நடந்தால் அதுவே
------------------------உனக்குப் பாதையாகிறது
ஒளி குறைந்த வீதியிலும்
உன் விழிகளுக்கு வழி தெரியும்
இதயத்தில் தீபம் மட்டும்
------------------------------------எரிந்து கொண்டிருந்தால்
மகளே....
********எழுந்து நட
********அந்த
********வானம் உனக்குக் குடை பிடிக்கும்
********பூமி உனக்கு வழி கொடுக்கும்
குறிப்பு:
என் துறைத் தலைவர் திரு.வி .ஜோசப் இம்மானுவேல் அவர்கள் எனக்கு எழுதி தந்த கவிதை இது...