எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமது தோழர்கள் விருது பெற்ற மகாகவி ஈரோடு தமிழன்பன்...

நமது தோழர்கள் விருது பெற்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் மக்கள் கவிஞர் தோழர் இன்குலாப் அவர்களின்  எழுச்சியுரையை கேட்டதிலிருந்து அவரைப் பற்றியும் அவரின் எழுத்துக்கள் பற்றியும் அறிய மிகுந்த ஆவலாக இருந்தேன். இணையத்தளங்களில் அவரின் படைப்பாக்கங்களை தேடியப்போது தோழர் இன்குலாப் எழுதிய மிகவும் பிரபலமான... உக்கிரமான.. எழுச்சியான பாடல்  மனுசங்கடா நாங்க மனுசங்கடா எனும் பாடல் கிடைத்தது . இந்தப் பாடல் எழுதப்பட்ட ஆண்டு குறித்தான தகவல் கிடைக்கப்பெறவில்லை. அறிந்தவர்கள் தெரிவிக்கவும். அந்த பாடலின் காணொளி இணைப்பு இது. 

 


பாடல் வரிகள் : 

மனுசங்கடா நாங்க மனுசங்கடா



உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள



மனுசங்கடா நாங்க மனுசங்கடா



 



எங்களோட மானம் என்ன தெருவில் கிடக்கா- உங்க



.. இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா



உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா



நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா



 



உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்



உங்க ஊர்வலத்ததில் தர்ம அடிய வாங்கி கட்டவும்



எங்கு முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் நாங்க



இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்



 



குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது



தண்ணியும் தீயாச் சுட்டது இந்த



ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது



 



சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில வேகுது உங்க



சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது



எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க- நாங்க



எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க டேய்



 



மனுசங்கடா நாங்க மனுசங்கடா



உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள



மனுசங்கடா நாங்க மனுசங்கடா



 



 



- மக்கள் கவிஞர் இன்குலாப்..



 



 

நாள் : 12-Dec-15, 5:47 pm

மேலே