எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கர்ம வீரர் காமராஜர் போல ஒரு தலைவன் நமக்கு...

கர்ம  வீரர் காமராஜர் போல ஒரு
தலைவன்  நமக்கு இனி கிடைப்பாரோ..

லஞ்ச  ஊழல் ஏதும் இல்லா ஆட்சி
நம் சந்ததிகள் இனி காண்பாரோ ..

சொந்தத் தாய் என்ற போதும் அவர்
சொத்து சேர்க்க அவர் விடுவாரோ ..

செத்துப் போகும் நாள் வரை மொத்தம்
நாலு சட்டை வைத்து இருப்பாரோ ..

வங்கிக் கணக்கு தனில் சில நூறு
ரூபாய்கள் மிச்சம் வைத்து செல்வாரோ ..

கக்கன் நல்லக் கண்ணு கர்ம வீரர்
இந்நாட்டில் பல நூறு தோன்றுவாரோ..

நிச்சயம் இது கை கூடும் நாளும்
வந்திட தனி மனிதர் மாறுவாரோ ..

பதிவு : கருணாநிதி
நாள் : 28-Dec-15, 12:46 pm

மேலே