எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வ சந்தமே வருக... வருக... - புத்தாண்டு 2016...

சந்தமே வருக... வருக...  -   புத்தாண்டு 2016 


Image result for flowers imagesImage result for flowers imagesImage result for flowers imagesImage result for flowers images

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

உறக்கம் கலை.. உற்சாகம் கொள்... 
வணங்கி நில்.. வரவேற்பளி... 
வாழ்த்து கூறு...புத்தாண்டு பிறந்ததற்கு !! 

சினத்தினை தவிர்.... புன்னகை ஏந்து 
ஏழைக்குதவ நேரம் ஒதுக்கு 
பெருமிதம் கொள்... மனிதனாக நடப்பதற்கு..!! 

பிரிவினை நீக்கு... அனைவரிடத்தும் அன்பாயிரு.... 
கருணை பெருக்கு... பிறர் கவலைகள் போக்கு... 
நெஞ்சை நிமிர்த்து... நீ கண்ணியம் காத்ததற்கு..!! 

குற்றம் விலக்கு கொள்கையுடன் இரு 
அரசியல் ஒழி.. நேர்மை வளர் 
ஆணவம் கொள்.. நல்லவனாய் இருப்பதற்கு..!! 

ஆக்கம் பெருக்கு... ஊக்கம் அளி... 
வன்முறை அடக்கு.. கேட்டினை களை 
நிமிர்ந்து நில் நீ வீரனாய் நடப்பதற்கு..!! 

நல்லதை நாடு நாவினிக்க பேசு 
ஆன்றோர்க்கு இணங்கு அவரையே வணங்கு.. 
மகிழ்ச்சி கொள் நீயும் ஆன்றோனாய் ஆனதற்கு..!! 

யாசகன் பசியாற்று.. வறுமை பிணி நீக்கு 
கல்வி புகட்டு... ஏழையின் கண் திற 
ஆலயம் வேண்டாம் ஆவாய் நீ கடவுள்..!!. 

அனுபவ கல்வி நடத்தி விடைபெறும் 
ஆண்டிற்கு நன்றி சொல்லி 
புத்தாண்டினை வரவேற்பபோம்...!! 

வசந்தங்கள் கூட்ட மலர்ந்திட்ட ஆண்டே 
வருக நீ.. வருக.... 
வாழ்வில் வளமுடன் நலம் பெருக...!!   

       வாழ்த்துக்களுடன், 
              - சொ. சாந்தி -


 Image result for flowers imagesImage result for flowers imagesImage result for flowers imagesImage result for flowers images


பதிவு : C. SHANTHI
நாள் : 1-Jan-16, 9:05 pm

மேலே