எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!! வின் ஞான கவி...

"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!!




வின் ஞான கவி எழுதி 
"வின்" ஆன செய்தியதை
வெண் கோப்பை கல்வெட்டில் 
என் எழுத்தை எழுதி வைத்து 
வாகைதனை உரைத்திட்ட 
தள எழுத்துக் கென்நன்றி..!

தேநீர் அருந்துதற்கு 
கோப்பைகள் பல கண்டோம் 
கவிதை உறிஞ்சும் கோப்பை 
கண்டீரா கண்டிடுங்கள் 
என்கவிதையை கோப்பைக்கு 
அளித்திட்ட "எழுத்துக்" கென் நன்றி..!!




கடந்த நவம்பர் மாதம் "எழுத்து" தளம் 
நடத்திய கவிதைப் போட்டியில்
"வின் ஞானம்" என்கிற தலைப்பில் நான்
எழுதிய கவிதைக்கு சிறப்புப் பரிசினை 
வழங்கிய எழுத்துத் தளத்தினருக்கு 
என் மனமார்ந்த நன்றிகள்.. என்னை 
எழுத்து தளத்தில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 
அனைத்து தோழமை நெஞ்சங்களுக்கும் 
என் உளமார்ந்த நன்றிகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இக்கவிதையுடன் நான் எழுதிய மற்ற 
கவிதைகளான "அரும்புகள்", "விஞ்ஞானம்" 
மற்றும் "உரிமைகள் பரிக்கப்படும் " ஆகிய 
கவிதைகளில் ஒன்றிற்கு இந்த பரிசு 
கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். 
விளையாட்டாக எழுதிய கவிதைக்கு  பரிசு 
கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எழுத்து தளத்திற்கு மீண்டும் என் நன்றிகள்..!!

                                                    நன்றியுடன்,
                                                   -  சொ. சாந்தி -


பதிவு : C. SHANTHI
நாள் : 23-Jan-16, 8:48 pm

மேலே