----------விளை நிலக்காட்சிகள்-11-------- விவசாய வேலைகளின் இடையே என்னைச் சுற்றி...
----------விளை நிலக்காட்சிகள்-11--------
விவசாய வேலைகளின் இடையே என்னைச் சுற்றி நடக்கும் சிறு நிகழ்வுகளையும், இயற்கையின் அழகையும் படமாக்கி அதை இந்த தலைப்பில் தந்துவருவதில் மகிழ்ச்சி. விளைநிலஙகள் எப்படி இருக்கும், அதைச் சுற்றி இருப்பவை எப்படி இருக்கும் என்று தெரியாமல் நகர வாழ்க்கையிலேயே சிறையான நகரத்து குழந்தைகளுக்கு அன்புப் பரிசாகவும், நகரவாழ்க்கையில், சூழ்நிலை காரணமாக ஓடிக்கொண்டிருக்கும் பலரது மனதை இலேசாக்க நான் எடுக்கும் ஒரு சிறிய தொடர்முயற்சிதான் இது..
படம் : 1காலைச் சூரியன் தன் ஒளிச்சிதறலில் வண்ணக்கற்றைகளைத் தரும் காலை நேரத்தில் மாட்டு வண்டிப்பதை
படம் : 2
அதே பாதை. நேரத்தில் மட்டும் மாற்றம். காலை
9 மணி சூரிய வெளிச்சத்தில் அந்த வண்டிப்பாதையின் அழகு
படம் : 3
தொட்டியிலிருந்து வாய்க்கால் வழியாக ஆரவாரத்தோடு
ஓடத் துவங்கும் நீர்.
படம் : 4
தொட்டியின் அருகில் பெருகெடுத்து ஓடும்
நீர்,வாய்க்கால் வழியாகப் போகும் போது மனம் அமைதியானது போல் நிதானமாக பயணம்.
படம் : 5
மாலை மயங்கும் நேரம். கதிரவன்
மலைகளுக்கிடையில் மறையும் மாலைப் பொழுதில் விளை நிலத்தின் மாலைக்காட்சி.