"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 11"காதல் எனும்...
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 11"காதல் எனும் தீவில் மங்கை தன்னை அறியாமல் தொலைந்து போகிறாள்..கனவுகள் அவளை முதன் முதலில் நெருங்கி வருகிறது அதைக் கண்டு அவள் தூக்கம் தொலைத்து இரவை அஞ்சுகிறாள்..ஆயிரம் முறை தண்ணீர் அருந்தியும் அவள் கொண்ட தாகம் இன்னும் அதிகரித்துக் கொண்ட போகிறது..அவள் தலையணைகள் நெருப்பாய் சுடுகிறது புரியாத மாயத்தில் அதிகாலை பொழுதில் வாசலில் அவள் காத்திருக்க அவளை நெருங்கி நிலவும் வருகிறது..காதல் என்றால் என்ன? என்று அறியாத பேதை மனதிலும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை வேறாய் ஊன்றி மரமாய் வளர்கிறது..இந்த காட்சிக்கு ஏற்றால் போல் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவியின் வடிவில் இங்கே கருத்தாக பதிவு செய்யுங்கள்.