சன்னதித் தெருவழியே சென்றான் அவன் கோயிலுக்குள் கூச்சல் குழப்பம்...
சன்னதித் தெருவழியே
சென்றான் அவன்
கோயிலுக்குள் கூச்சல் குழப்பம்
என்னவென்று விசாரித்தான்
அம்பாள் கழுத்திலிருந்த
காசுமாலையைக் காணவில்லையாம்
அர்ச்சகர்களுக்குள் அடிதடி
அவன்
முதல் தடவையாய் கையெடுத்துக் கும்பிட்டான
நன்றி கடவுளே நன்றி
இன்னமும் நான்
நாத்திகனாய் இருப்பதற்கு!