எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இசைத்தமிழின் தொன்மை.! சங்ககாலத்தில் இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என...

இசைத்தமிழின் தொன்மை.!


சங்ககாலத்தில் இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பிரிவுகள் (Departments) இருந்தது. இந்த மூன்று பிரிவுகளிலுமே நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். நாடகத் தமிழில் நாட்டியக்கலையும் அடங்கும். இவைகளைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் ஒரே ஒன்றுகூட நமக்கு கிடைக்கவில்லை.!
மிகப்பழமையான இசைக்கலை பற்றிய சிற்பங்களும், இசைப்படிகள, இசைத்தூண்கள் போள்றவைகளும் நடனக்கலை சிற்பங்களும் மட்டுமே (தமிழர்களுடையதாக) நாம் அறியக் கிடைக்கிறது.! இதைப்பற்றி நாம் ஏதாவது பேசினால், மொழி என்பது தொடர்புக்காக மட்டுமே என்று வாதிடுகிறார்கள்.!
வீணை போன்றது உடைபட்ட நிலையில்.
ஆன்மீகம், தத்துவஞானம், கலைஞானம், வாழ்வியல், வரலாறு, இனப்பெருமை, குலப்பெரு
மை ஆகிய அனைத்தையுமே உள்ளடக்கிய நமது தாய்மொழியை எவ்வாறு தொடர்பிற்காக மட்டுமே என்று நாம் ஒதுக்கிவிட முடியும்.?
சங்கத்தமிழ் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது.
ஆயினும், இசைத் தமிழுக்காகவும், நாடகத் தமிழுக்காகவும் எழுதப்பட்ட பல நூல்கள் நூல்கள், காணாமற் போனதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது.!

உளிகள் உருவாக்கிய ஏழு சுரங்கள்.!

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலைக் களஞ்சியத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து உருட்டி விட்டால், அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு, ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு சுரங்களையும் ஒலிக்கும்.! ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு சுரமானது எழும்படியாக ஏழு படிகளும் அமைந்துள்ளது.!

சில அனுமன் புத்திரர்கள் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.
உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.!

இசைத் தூண்கள்...!

தமிழர்களின் இசைஞானத் தொன்மைக்கு சான்றாகி நிற்கும் இசைப்படிகலைப் போலவே பிற இனத்தவர்கள் சுரம் என்றால் என்ன என்றே அறியாமல் வாழ்ந்த காலத்திலேயே இசையின் சுரங்களை இசைத்துக் காட்டக்கூடிய இசைத் தூண்கள் வடிவமைக்கப் பட்டது.!






ஏழு சுரங்களான ச,ரி,,,,,நி என்ற சுரங்களைத் தனித்தனியாக ஒவ்வொரு தூணும் இசைக்கிறது. ராகங்களையும் காட்டமுடியும். சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.


இதில் பெரிய தூணில் இசையும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் ஒலியும் இருப்பதாக கூறப்படுகிறது.

கல்லின் வகையறிந்து, அதை வடிக்கும் முறையறிந்து, சுரத்தின் துல்லியத்தையும் அறிந்திருந்தால்தான், இப்படி ஏழு சுரங்களும் ஒலிக்கும்படியாக உளியால் செதுக்கி, எக்காலமும் வியக்கும்படியாக நிறுத்தமுடியும்.!  

இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.




நாள் : 19-Dec-16, 10:30 pm

மேலே