இனம்’.. இயக்கம் ராஜபக்சே! ------------------------------------------ `இனம்’ படத்தை இப்போதான்...
இனம்’.. இயக்கம் ராஜபக்சே!
------------------------------------------
`இனம்’ படத்தை இப்போதான் பார்த்துட்டு வந்தேன். இந்த படத்தை பார்க்க இன்று அபிராமி திரையரங்கிற்குள் நான் நுழைந்தபோது ஒரு 20 பேர் அமர்ந்திருந்தார்கள். அப்புறம் ``குக்கூக்கு டிக்கெட் கிடைக்கல மச்சான்.. அதான் இந்த படத்துக்கு வந்தேன்” என்று போனில் பதில் சொல்லிக்கொண்டே ஒருவர் வந்து அமர்ந்தார்.
முதல் பத்து நிமிடத்திலேயே படத்தின் லட்சணம் என்னவென்று தெரிந்துவிட்டது.. மொக்கைனா.. மொக்க.. அப்படியொரு மொக்கை..
( இந்த மொக்க படத்துக்காப்பா டைரக்டர் சங்க அப்பாடக்கர்களை கூட்டி வச்சு இவ்வளவு பில்டப்பு.. )
இனக்கலவரம்.. இனக்கலவரம்னு படத்துல சொல்லும்போதே எரிச்சல் வருது.. கலவரம் என்றால் என்ன.. இனப்படுகொலை என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்ரண்டிஸ்களா..
அகதியா வந்த ஒரு பொண்ணு அதிகாரியிடம் நடந்த கதையை சொல்வதன் மூலம் படம் பயணிக்கிறது.. இடைவேளை முடியும்வரை என்னதான்டா சொல்லவர்றீங்க.. என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது..
கொஞ்சம் காட்சிகள் தமிழர்கள் படும் அவஸ்த்தைகளை காட்டுகிறது. ஆனால் கடைசியில்தான் பழத்தில் விஷ ஊசி போட்டு கொடுத்திருப்பது தெரியவருகிறது. இவ்வளவிற்கும் இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக எடிட் செய்யப்பட்ட படத்தைதான் நான் பார்த்தேன். பல இடங்களில் குரல் மௌனிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கள ராணுவ வீரகள் தமிழ் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் தவறாக நடக்கிறார்கள்.. அதைத்தொடர்ந்து மக்கள் போல் வந்த போராளிகள் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். உடனே கருணை உள்ளம் கொண்ட சிங்கள ராணுவ அதிகாரி தமிழர்களை காப்பற்றுகிறாராம். ஆனால் போராளிகள் சுட்டு தான் மக்கள் காயமடைந்தார்கள் என்று அப்பட்டமாக இலங்கை அரசின் குரலை படமாக்கியிருக்கிறார்கள்.
படம் முடியும்போது இயக்கம் ராஜபக்சே பெயர் வரும் என்று பார்த்தேன்.. சந்தோஷ் சிவன் என்று போட்டிருந்தார்கள். பாவம் இயக்கம்னு பெயர் போட ராஜபக்சேவுக்கு கூச்சமாக இருந்துருக்கும்போல.
இதுக்குமேல படத்தை விமர்சிக்க ஒண்ணும் பெருசா இல்லை. சந்தோஷ் சிவன் திரைப்பட விருதுவிழாக்களில் இந்த படத்தை போட்டுக்காட்ட இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன்.
ஆனால் படத்தின் பின்புலம் குறித்து எனக்கொரு சந்தேகம் வருகிறது.. இந்த படத்தை பெருமையுடன் வழங்கியிருக்கும் திருப்பதி பிரதர்ஸின் லிங்குசாமிக்கு இந்த படத்தில் ஒளிந்திருக்கும் அரசியலும், ஓடாத இந்த படத்தை வெளியிட்டு நஷ்டப்படுவோம் என்றும் தெரியாதா.. தன் பணத்தை தெரிந்தே ஒருவன் நஷ்டத்தில் முதலீடு செய்ய எப்படித்துணிவான் என்ற சந்தேகம் தான் அது.
என்ன மேட்டர் என்று விசாரித்தால் லிங்கு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் தான் கேமராமேன் என்கிறார்கள். அது சரி.. ஒரு கேமராமேனுக்காகவெல்லாமா லிங்கு தன் பெயரை கெடுத்துக்கொள்வார்.
ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவின் பணம் பாலிவுட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படும் தகவலுக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமிருப்பதாக சந்தேகம் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.. அதை தான் படத்தின் காட்சிகளும் உறுதிப்படுத்துகிறது..
இந்த படம் தியேட்டரில் மட்டுமல்ல.. திருட்டு டிவிடியில் கூட நீங்கள் பார்க்க ஒர்த் இல்லை.. உங்களுக்காக படம் பார்த்துட்டு வந்து எழுதவேண்டும் என்று நினைத்ததால் எனக்கு தான் 120 ரூபாய் நஷ்டம்.. ஒழுங்குமரியாதையா 120 ரூபாயை எல்லாரும் சேர்ந்து வசூல் பண்ணி கொடுத்துருங்க..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
30-3-14
நன்றி : கார்டூனிஸ்ட் பாலா/ பேஸ்புக்