அனுபவத்தின் குரல் - 26 ************************************** நகரங்களில் வசிப்பவர்கள்...
அனுபவத்தின் குரல் - 26
**************************************
நகரங்களில் வசிப்பவர்கள் அவரவர் பகுதியிலும் கிராமங்களில் உள்ளவர்கள் அவர்களின் ஊரிலும் அனைவரும் ஒன்றிணைந்து இயன்றளவு பொருள்
உதவி அல்லது புத்தகங்களை சேகரித்து அல்லது புதியதாகவோ வாங்கி கொடுத்து சிறு அளவில் முதற்கட்டமாக ஒரு நூலகம் அமைத்திட முன்வர வேண்டும்.
உதவி அல்லது புத்தகங்களை சேகரித்து அல்லது புதியதாகவோ வாங்கி கொடுத்து சிறு அளவில் முதற்கட்டமாக ஒரு நூலகம் அமைத்திட முன்வர வேண்டும்.
முக்கியமாக இளைஞர்கள் சேர்ந்து இந்த பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் .அங்கு அனைத்து துறைகள் சம்பந்தப்பட்ட நூல்களும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் . பல ஏழை எளிய மாணவர்கள் தங்களின் பொருளாதார நிலையால் எந்த புத்தகமும் வாங்கிப் படிக்க முடியாதவர்கள் என்பதால் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பொது அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும் .எனவே இளைஞர்கள் மற்றும் விருப்பமுள்ள பெரியர்வகள் இணைந்து இந்த நூலகம் அமைப்பதில் முழுவீச்சுடன் செயல்பட்டால் அதன் பலனை அனைவரும் பெற முடியும் .
அரசின் உதவியை எதிர்பார்ப்பதை விட தாங்களாகவே மேற்கொள்ள வேண்டும் .வசதி உள்ளவர்களிடம் , விருப்பம் இருப்பவர்களிடம் என பலரிடமும் உதவிபெற்று ஒரு நூலகம் அமைத்திடல் மிகவும் அவசியம் .
பழனி குமார்