எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூன்று முகத்தில் ஒரு காதல் இது ஒரு தொடர்...

மூன்று முகத்தில் ஒரு காதல்         

                                இது ஒரு தொடர் கதை. தொடர்ந்து படித்தால் தான் கதை முழுமையும் தெரியும். ஒருவனின் வாழ்க்கையில் ஒரு காதல் முன்று விதமாக வருகிறது. அந்த காதல் எப்படி சேருமோ சேராதோ என்பது தான் கதையின் காதலின் அழகு. முதல் விதமாக கனவில் காதல் தேவதையாக வந்தாள். அதுவும் தொடக்கத்தில் தான் உள்ளது. இரண்டாவது விதமானது இன்னும் தெரியவில்லை. படித்தால் தான் தெரியும். அன்று சனிக்கிழமை மணி 8.30 என்றளவில் கலக்கபோவதுயாரு என்ற காமிடி ஹோ பார்த்துவிட்டு ஒரு நல்ல ஆங்கிலம் படம் பார்த்துவிட்டு தூங்கும்போது மணி 11.30 இருக்கும். என் வீடு பார்த்தாலே பயமாக இருக்கும். வெளிச்சம் இல்லாமல் யாரும் இருந்தாலும் அச்சமடைய வைக்கும் என் வீடு. என் அம்மா அவர்களே நான் இல்லாமல் இருக்கமாட்டார். இரவில் வெளிச்சம் இல்லாமல் நீங்கள் கூட இருக்கமாடீர்கள். பயத்துக்கு பயத்தை காட்டும் வீடு அது தான் என் வீடு. என் காதல் கனவு கன்னி வருவாள் என்ற மகிழ்ச்சியுடன் நல்ல படமும் பார்த்துவிட்டு 11.30 மணிக்கு உரங்கினேன். அன்று அந்த நேரத்தில் என் வீட்டில் வேளியே நாய்கள் ஓநாய் போல ஒலியை ஏழுப்பி அதை அந்த மணியளவில் நான் கேட்க ஏதோ, எனக்குள் ஒரு எண்ணங்கள் உருவாகுகின்றது. அதையும் தாண்டி உரக்கத்தில் இரங்கினேன். ஒரு பத்து நிமிடத்தில் கழித்து உரங்கினேன். எனக்குள் ஒரு மாதிரியான உணர்வுகளுடன் உரங்க சென்றதால் அப்போது ஒரு நொடியில் ஆயிரம் மயிள்கள் கடந்து ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊர் பெயர் தெரியவில்லை. ஒரு பலகையில் எழிதி இருந்ததது அது பாதி அழிந்து காணப்பட்டது. என்ன பன்றது நேற்று கனவில் பறந்துக்கொண்டு இருந்தேன். இன்று நடக்க போகிறேன். என் முதல் கனவில் எப்படி பார்த்தேனே அதே போல நடக்கிறது. நேற்று என்ன நேரமோ அதே நேரம் தான் அதே சூழல் தான் அதே மரம் என் கண்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் என்ன திருத்தம் என்றால் நேற்று ஒரு எவ்வளவு அதாவது அளவுற்கு அதிகமான சுற்றுச்சூழலின் அழகை கண்டேன் என்றால் அதுபோல இப்போது இந்த நொடியில் நின்று கொண்டு இருந்த இடத்தில் அதற்கு எதிர்மறையாக இருந்ததது. நேற்று அதை பார்த்துவிட்டு இதை பார்ப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை.         
                            கனவில் கனவு தேவதை வருவாள் என்று பார்த்தால் என் கனவே நல்ல இருக்கும். என் கண் எப்படி நன்றாக தெரியுமோ அதுபோல கண்ணில் எண்ணெய் ஊற்றினால் கண் கலங்கி மயக்கி தெரியும் நிலையில் காணப்படும். அது போல இன்று என் கனவு கலக்கிவிட்டது போல என்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். மாலைப்பொழுது தான் ஆனால் சற்று அச்சத்தை தரக்கூடிய சூழ்நிலையில் சிறிது காற்று குளிர்ச்சியாக வீசியது. மாலைபொழுதில் ஒரு மண் சாலையில் ஒரு ஊருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தேன். சரி நடந்து கொண்டு இருந்தேன். நீண்ட தொடர் சாலை கால் வலிக்க ஆரம்பித்ததது. கண் தொலையில் ஒரு பெரிய மரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தில் தொலைவில் இருந்த நான் நடந்து சாலைகளை கடந்து மரத்துக்கு குறுகில் சென்றேன். அந்த மரத்தை பார்த்தால் எப்படி இருந்ததது தெரியுமா? பசுமையாகவும் இல்லை காய்ந்தும் இல்லை இவற்றிக்கு இடையில் காணப்பட்டது. இந்த மரத்தில் ஒரு பூக்கள். குருவிகள் கூட இல்லவே இல்லை. சிறிதும் சத்தமில்லை. இப்போது காற்று வீசவில்லை அமைதியான சூழ்நிலையில் தனியாக நின்று கொண்டு இருந்தேன். சுற்றிலும் ஒருவரும் கண்களுக்கு தெரியவில்லை. என்னடா இது எந்த இடம் என்றும் தெரியவில்லை என்ற சூழல் வந்த இடத்திற்கு சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பிக்கலாம் என்று கால்களை வைக்கும்போது சிறிது காற்று எனக்குள் அதுவும் என்மீது வீசி என்னை திரும்பி பார்க்க வைத்ததது. அங்கு கண்களுக்கு கருப்பான ஒரு ஒருவம் தெரிந்ததது. அந்த ஒருவத்தை கூர்ந்து கவனித்தாலும் கண்கள் தெரியவில்லை. என்ன பன்றது ஏன்னென்றால் என் வயது அப்படி என்னடா உன் வயது என்று கேட்கிங்க.சரி கூர்கிறேன் 20 தான். இந்த வயதில் நல்ல பூக்களுடன் கூடிய பெண்களை கண்டால் அந்த பெண் ஆயிரம் கி.மீ தொலைவில் சென்றால் கூட கண்கள் தெரியும். இது யாரு என்று கூட தெரியவில்லை. அதான் தெரியவில்லை அருகில் செல்ல ஆரம்பித்து நடந்து இப்போது பார்த்தால் அந்த ஒருவம். ஒருவம் என்ன ஒருவம் தெரியுமா கூருங்கள் பார்க்கலாம். இது பெண்ணா இல்லை ஆணா இல்ல வேர ஒன்றா என்று எண்ணி பாருங்கள். சரி நானே கூறுகிறேன். என்ன அது ஒரு பெண்தான். கண்களுக்கு அந்த பெண் தெரியவில்லை நானும் கூர்ந்து நன்றாக பார்த்தேன்.            
                            அப்போது கூட பின்புறம் தான் தெரிந்ததது. பின்புறம் சென்றதால் தான் நேற்று கண்ட கனவு கன்னி தன் அழகு சாதனப்பொருட்களை களைத்துவிட்டால் என்று தெரியவில்லை. அவளை பார்ப்பதற்கு எப்படி இருந்தால் தெரியுமா? என்னடா தம்பி அழகாக இருந்தால் தான் அழகை பற்றி கூறுவாயா! இல்லை இல்லை இவளும் பற்றி கூறுகிறேன். இவளின் தலைமூடி கருமையாகவும் மற்றும் ஒரு பூக்கள் கூட வைக்கவில்லை. அவள் தலையின் நிறத்தை கவனித்து பார்த்துவிட்டேன் என்ன நிறம் அது என்று தெரியவில்லை. நானும் பலமுறை ஊற்று பார்த்துவிட்டேன். ஒன்றும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிறத்தில் ஒரு பெண் தலை முடியை வாரமல் அதுவும் நீண்ட கூந்தலுடன் காணப்பட்டது. அவளின் முடியின் நீளம் எவ்வளவு தெரியுமா?அய்யோ அவளின் இடைக்கு கீழாக இருந்ததது. மல்லிப்பூ வாசமும் கிடையாது. ஆனால் காற்றில் வாசம் வருகிறது. அந்த சூழலில் பார்ப்பதற்கு பயத்தை உண்டாக்கும். அவளின் உடை என்ன அணிந்து இருந்தால் தெரியுமா என்ன வகை உடை என்று தெரியவில்லை. அந்த உடை பாவடை சட்டை போலவும் இல்லை தாவணி போலவும் இல்லை இரண்டும் கலந்து காணப்பட்டது. இரண்டும் கலந்து காணப்பட்ட உடையின் நிறத்தின் வண்ணம் மண்ணில் விழுந்து எழுந்து வந்ததது போல ஒரு வெள்ளை நிறத்தில் இருந்தாள்.                                          அவளின் கைகளில் ஒரு வளையல்கள் கூட இல்லை. அவளின் விரல்களில் நகம் அதிகமாக வளந்து இருந்ததது. இப்படி ஒரு பெண்ணை பார்த்தால் பயப்படத் தோன்றும் ஏன்னென்றால் பல திரைபடங்களில் இது போல தான் பெண்களை பார்த்துருக்கிறேன். நீங்கள் அந்த பெண்ணை பார்க்கபோகுகினோ இல்லையோ நான் அவளை பார்ப்பேன்.எனக்கு அச்சம் எல்லாம் இல்லை. சிறிது பயம் மட்டும்தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியாது. அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன்ன நான் தானே அச்சமடைகிறேன் அதுதான் விசியம். சிறிது தொலைவில் நடந்து அவளை முகத்தை பார்க்க எனக்கு ஆர்வம் அதிகம். அவளையும் பார்க்கவில்லை இவளையும் பார்க்கமல் போகமாட்டேன் என்று குறிக்கோளுடன் நடக்க ஆரம்பித்தேன். நானும் எவ்வளவு வேகமாக நடந்தாலும் அவளை நெருங்க முடியவில்லை ஆனால் அவள் பொறுமையாக தான் நடக்கிறாள். இப்படி போனால் அவளை பார்க்கபோகமல் போகும் வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் ஓட ஆரம்பித்தேன். அவள் பார்க்கக்கூடாது என்று கடவுளை எண்ணி ஓடினேன். நெருங்கிவிட்டேன் அவளை தொட நினைத்தேன் அப்போது நான் இருந்த இடத்தில் சிறிது காற்று கூட இல்லை இப்போது மழை வருவதற்கு முன் வீசும் காற்று அளவுக்கு அதிகமாக வீசியது. அதிகமான காற்று வீசியதால் என் கண்மீது தூசி விழுந்து நான் கண்ணை கசக்கிவிட்டு பார்த்தால் அவள் காணவில்லை. ஏங்கே என்று தேடினேன். ஆனால் கண்டுபிக்க முடியவில்லை. பின்பு சிறிது தூரம் நடந்தேன் தொலைவில் யாருக்கும் தொடர்பில்லாமல் ஒரு ஓட்டு வீடு தெரிந்ததது. அந்த வீட்டின் அருகில் ஒரு பெரிய விழுதுகளுடன் கூடிய ஆலைமரம் ஒன்று இருந்ததது. வீசிய காற்று நின்றுவிட்டது. அந்த வீட்டையும் அந்த மரத்தையும் பார்த்தால் அங்குதான் இருப்பால் என்று எண்ணி என் எண்ணங்களை ஒரு மூளையில் வைத்துவிட்டு அதன் அருகில் சென்றேன். என் கண்ணுக்கு தெருவதால் பின்புறமாக இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. சரி அந்த வீட்டிற்கு முன்புறத்தில் நோக்கி நடக்க முயன்றபோது என் கண்னுக்கு தெரிந்ததது அவள் ஒருவம் அதுவும் பின்புறமாக தான் இருந்தாள். அவளை தொட முயன்றாலே காற்று வீச ஆரம்பிக்கிறது. அதையும் தாண்டி அவளை தொட்டுவிட்டேன்.இபோது அவள் என்ன செய்து இருப்பாள் என்று நினைகிறங்க! திரும்பி பார்ப்பாள் எண்ணிதான் நானும் கை வைத்தேன் அவள்மீது ஆனால் திரும்பவே இல்லை.                  
                               பார்ப்பதற்கு பதிலாக சிரித்தாள். சிரித்து இருந்தாள், சிரித்து கொண்டு இருப்பாள், சிரித்து கொண்டே இருப்பாள் போல இதை கண்ட எதற்கும் அச்சமடையமாட்டேன். இப்போது அவளை பார்க்கமாலே அவளின் சிரிப்பில் பயந்துவிட்டு திரும்பி ஓட ஆரம்பிக்கும்போது கால் தவறி கீழ விழுந்துவிட்டேன். எழுந்து பார்த்தால் அதிக அளவில் தூரலுடன் கூடிய காற்று வீச ஆரம்பித்ததது. எழுந்து நின்றால் என் கால் தானாக ஒதர ஆரம்பிக்கிறது. பின்னாடி பார்த்தால் பிசாசு போல சிரிக்கும் பெண் முன்னாடி ஓட ஆரம்பித்தேன். அந்த மரத்தை நேக்கி பார்த்துக்கொண்டே ஓடும்போது ஒரு ஒருவம் கூட தெரியவில்லை. அருகில் செல்லும்போது ஏதோ வெள்ளையான ஒருவம் கயிற்றை பிடித்து தொங்கி கொண்டுருந்ததது. இன்னும் அருகில் சென்று பார்த்தால் அது கழுத்தில் தூக்கு போட்டுக்கொண்டு என்னை பார்த்து அதிக அளவில் சிரித்துக்கொண்டே இருந்ததது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்று சிறிது நேரம் யோசித்தேன். முடிவு எடுத்தேன் ஓடுவதற்கு அதுவும் கண்ணை முடிக்கொண்டு திரும்பி பார்க்காமல் ஓடினேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன். இப்படி ஓட மாட்டேனே எப்படி ஓடுகிறேன் என்று கண்ணை திறந்து பார்த்தால் உரக்கத்தில் இருந்த நான் எழுந்து ஒரு சுற்றில் முட்டிக்கொண்டு ஓடிக்கொண்டுயிருக்கிறேன். அதை யாரும் பார்க்கவில்லை அப்படியும் ஒரு கனவு இப்படியும் ஒரு கனவா!,......கடவுளே             இரண்டாவது விதமும் கனவிலா,...             இதுவும் காதல் தான் ஆனால் என்ன அச்சத்தில் தொடங்குகிறது. ஆரம்பித்தில் தெரியாது காதலா என்று போக போக தெரியும்.   

நாள் : 17-Jan-18, 9:30 am

மேலே