எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா கருவறையில் நான் எட்டி உதைத்ததைக் கூட கைதட்டி...

அம்மா

கருவறையில்
நான் எட்டி உதைத்ததைக் கூட
கைதட்டி ரசித்தவள் அவள்,
நூறு எலும்புகள் ஒரேநேரத்தில் உடையும் வலி போன்ற பிரசவ வலியைக் கூட
என்னைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் அடக்கிக் கொண்டவள் அவள்,
அவளும் நானும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குழந்தையாக பிறக்கவேண்டும் வரும்காலத்தில்,
நன்றாக நனையவேண்டும் அன்பென்ற அடைமழையில்,
பாசப்பூக்களாய் எங்கள் உறவு பேச,
பூங்காற்றும் எங்கள் வாழ்வினில் வீச,
என்றும் வணங்குவேன் அவளை எந்தன் தலையின்மேல் தூக்கிவைத்து,
இன்னும் எழுதுவேன் பல வரிகளைக்
கவிதையாய் கோர்த்து…..
                                  -S.P Mohamed Asif...

பதிவு : SP md asif
நாள் : 30-Jan-18, 1:24 pm

மேலே