எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா...

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரமாக நான் விரும்பவில்லை...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ நி தான் உன் தாய் பேச்சு கேட்டு..

அதையும் சகித்து கொண்டேன் நான் விரும்பி ஏற்ற வாழ்க்கைக்காக...
நி இறங்கி வரவில்லை...
இருந்தாலும் நான் இறங்கி வந்தேன்...
நேற்று அடிபட்ட போது கூட என்னை உண்ணிடம் சமர்பிக்க செய்தேன்.ஆனால் நியும் உன்தாயும் பேசிய வார்த்தைகள் 

உன் தாயால்? இனைந்தே பயணம் செய்தும் இணைய முடிய இரும்பு இதயாமாய் என் வாழ்க்கை மிண்டும் ஒர் இதிகாசமாய் தொடர விருப்பமில்லை....

இக்காலத்தில் ....
இக்கதை தற்கொலை தலையெழுத்தென்று...

பத்து வயதில் குழந்தை தொழிலாளி...
பதினைந்தில் குடும்ப பெறுப்பு...

இருபத்திமூன்றில் திருமணம்

இருபத்தந்துக்குள் எத்தனையோ...


பத்தாவது பாஸ்க்கு...
பாரின் வேலையா கிடைக்கும் .

வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாழுமா  எனஇருந்தேன்?


எவன் சொல்லியும் திருந்தாமல்...
உன்னிடம்
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
எவ்வளவே செய்தன் உன் தாய்க்கும் குடும்பத்துக்கும் .

வேசிக்கு காசு
தானே...

வருபவள் ஓசிதானே...
என்று
மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
பதினைந்து பவுனுடன் ...

விவரம் தெரிந்த நி ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாய் .

வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாய...

தின்னு கொழுத்தேனா 
மருந்துக்கும் திருந்தவில்லை நி...

பதினைந்து பவுன் போட
முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைத்தேனா உன்னை? ..
எதை சந்தைக்கு அனுப்பி உன் தந்தை

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...

மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாய நி..


இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,

வயிற்றைக் காரணம் காட்டினாய நி...
வாய்க்கு ருசியாய் நி உண்ண நான் ஒயாமல்  உழைத்தேன்.

சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்பினேனா?..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போனார்களா என்னை? .

கடைசி இந்த எழுவருடமாக...

உங்க அப்பன்
 வீட்டுக்கு
நி போக..,
வேறோருத்தி 

வாசனையாய் வந்து போக வைத்தேனா?....

என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து 
கடமைக்கு எட்டிப் பார்த்தாயா...
அதுவும் இல்லை

கருகருவென
என் நிறத்தில்...

பொட்டபுள்ள..! 
 பெற்று கொடுத்தாயா அதுவும் இல்லை....

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '

என்று சொல்லியா திரும்பினேன்?...
உன் தாய் சொல் கேட்டு என்வாரிசை அளித்தாய்
அதையும் சகித்தேன்....


முன்று மாதமாகியும் நான் வரவில்லை...
மகளிர் ஸ்டேஷன் சென்றால்
 மானியம்

கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனாய்...

கூலி வேலைக்குப் போனவனைக்
கூட்டி வரவேண்டி...

அறிந்தவர்  தகவல் சொல்ல...
மறுபடியும் ஏற்றுகொண்டேன்
நி என்னை கரம்பிடித்தது முதல்
ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டதா..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் உன்னை...

ஆனால் நியோ

அடையாளம் தெரியவில்லை ...
என்கிறாய் என்னை...
உன் தகப்பன் கொடுத்த
கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த நி ,
என் கைகளில் சிக்கிக் கொண்டயோ..,

வந்த கோபத்திற்கு..
உன்னை
வீசியெறியவே தோன்றியது...

உன்னை முகர்ந்த நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்ததால்,

என்னைப் போலவே...


என்னைப் போலவே


என்னைப் போலவே நி இருந்திருப்பாய்..
நி
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,
உன் தாயின்
பல்வைத்த வாயில் விழுந்து...
சுயம் தொழைந்து அவமானம் தின்கிறது,

கண்களை மட்டும்
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது உன்னை

ஒரு கணம் நான் முடிவு எடுத்தால்... உன் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமென்று விறு
 கொண்டு அழுகிறது என்மனம்



தூரத்தில்
நி வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்... 
உன்னை நேற்றிலிருந்து....

கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கழட்டி விட நி திர்மானித்துள்ள போது உன்னை நினைத்து கோமாளியாய் இனி என்னை தெலைக்க மனமில்லை....




ஏனோ நேற்றிரவு 
தூக்கம் நெருங்கவில்லை.....

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
உன் வாழ்க்கை என்னோடுதான்
என்ற பொய்த்தனத்தோடு நி செய்யும் செயல்கள் பெருந்தவில்லை என் மனதோடு....




எந்த குழந்தையும் இல்லாதால் உன்னை குழந்தையாய் பாவித்தது என் கோமாளி தனம் .
உன் தவறுனர்ந்து கரம்பிடிப்பாய் என்று காத்திருந்தேன்..
நேற்று கூட

கைப் பிடித்து சுயம்காப்பாய் என்று நம்பி னேன்.நியோ
உதறிவிட்டு நடந்தாய்....

தூக்கம் இல்லை
நெடுநேரம்...



விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு
வரச் சொன்னேன்





தினமும் என் மீது படுத்துக்கொண்டு..
.என்னை வாயில் கடிப்பாய் இனி?

அழுக்கிலிருந்து உன்னை காப்பாற்ற.....
என்னைதவிர 
வாழ்ந்து முடிந்த 
உன் தாயல் இனி நியும் கைம்பெண்



உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,

'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்க நியும் என்னை ஆண்

மகனாக்கவில்லை...

எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் உன்னை குழந்தையாய் நினைத்தால் எதுவும் தடுக்கவில்லை...

நி சொன்ன முதல் வார்த்தையே...

என்னை விட்டுவிடு என்று தான்!
உணக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,
உன்னை. விட முடியாத என்ன உன் தாய்
அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

உன் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

உண் சாக்கடையை...
அன்பாலேயே கழுவினேன்...
உன் மாமா உன்
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை,

நான் சொல்லியா திருந்தபோகிறாய் ,



முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...
நி
இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..
என்று கூறினாளும்
இனி நான் உன்னுடன் இல்லை இனி.
நானும் சரசாரி மனிதனாக ....

படித்த
என்னையும் படிப்பித்தாய்.. நி நன்றி





என்னை மனிதனாக்கிய...


என்  தாய்க்காகக் காத்திருக்கிறது ...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...

......................வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் 

என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,

அதோ அது நிதான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாய் ...


உன் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு அழுவாய் 
இனி  நி
'பாவா, பாவா' என்று......

என் எச்சில் உன்
உடல் பரந்த என் நிமிடங்கள்
உன்
உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

அடங்கும்...................
இனி உனக்கு.......................

"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,

மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! " என்பது கூட பெய்த்துவிட்டதே உன்னுடன் வாழ்ந்த வாழ்வில்.......
வசந்தராஜ் சினிவாசன்

பதிவு : goldsmithsdscom
நாள் : 15-Apr-18, 8:44 pm

மேலே