எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💘நீங்காத நினைவுகள்💘 " உள்ளம் உருகி காதலித்தேன் உலையில்...

💘நீங்காத நினைவுகள்💘

" உள்ளம் உருகி காதலித்தேன்
  உலையில் கருகி எரிவதற்கா?"💓

"சிலையின் முத்துக்கள்
 கலையை புத்தாக்கும்
 சிற்ப சிலை உன் - முத்து
 முழிவலை என்னை
 பித்தாக்கியதேனோ"!💓

"விலை தூண்டும் பூவின்
 இலையிழந்த காம்பாய்
 மலை தாண்டும் மெய்காதல்
 உன் மனதை 
 வருடவில்லையேனோ!"💗

"அலைகள் ஓய்ந்து ஆழி
 நிலைகள் மாறலாம்
 தலை இழந்தாலும் துளியும்
 உன் 
 நினைவுச்சோலை மாறாதே"💔💘

                              💘R💔B💘

பதிவு : ரமேஷ் RB
நாள் : 17-May-18, 9:42 pm

மேலே