காலம் காலம் என்ற கணக்கீடு மட்டும் இல்லையெனில் மனிதனும்...
காலம்
காலம் என்ற கணக்கீடு
மட்டும் இல்லையெனில்
மனிதனும் ஒரு
சுதந்திர பறவைதான்..!!
பிறக்கும் நேரத்தைக் கொண்டு
வயது என்ற கணக்கும்..
இறப்பின் வேகத்தைக் கொண்டு
ஆயுள் என்ற கணக்கும்
நம் வாழ்வை நகர்த்துகிறது..!!
ஓடிவிடும் நாட்கள்
ஒருவித பயத்தை மட்டும்
விட்டுச்செல்லும்..!!
எவ்வளவு தூரம் சென்றாலும்
விரட்டி வரும் வயது..!!
மழலைப் பருவத்தை திரும்பிப் பார்க்கும்
இளமை காலத்தின் - முன்வந்துநிற்கும்
முதுமையின் வரவேற்பு..!!
இவ்வளவுதான் வாழ்க்கையா..??
என்ற கேள்வியும்..
இவ்வளவு உண்டா வாழ்வதற்கு
என்ற ஆச்சரியமும்..
நம்மை சார்ந்தது..!!
நகரும் காலத்தோடு
நாமும் நகர்வதே
வாழ்வின் அர்த்தமாகும்..!!